மத அடிப்படைவாத பயங்கரவாதிகள் புகலிடமாக தமிழகம் மாறாமல் இருப்பதற்கு தமிழக அரசு எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று தமிழக பாஜகவின் செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தெரிவித்திருக்கிறார்.
அவருடைய அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, சென்றவாரம் கேரள மாநிலத்தில் மனைவியின் முன்பாகவே 27 வயது இளைஞர் படுகொலை செய்யப்பட்டார். அவரை கொலை செய்த கும்பல் கோவைக்கு தப்பிச் சென்று இருக்கலாம் என்று கேரள மாநில காவல்துறை தெரிவித்திருக்கிறது தமிழ்நாட்டில் அவர்கள் பதுங்கி இருக்கலாம் என்ற சந்தேகத்தில் விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் நடைபெற்ற ராமலிங்கம், சசிகுமார், எஸ்ஐ வில்சன், படுகொலை உள்ளிட்டவற்றில் மத அடிப்படைவாத இயக்கத்தை சார்ந்தவர்கள் குற்றம்சாட்டப்பட்டவர்கள் இந்த சூழ்நிலையில் கேரள மாநிலத்தில் படுகொலை செய்துவிட்டு தமிழ் நாட்டிற்கு தப்பி வந்து இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த தகவல் அதிர்ச்சியை தருகிறது என கூறியிருக்கிறார்.
மத அடிப்படைவாத பயங்கரவாதிகளுக்கு ஆன இருப்பிடமாக தமிழ்நாடு மாறிவிடக் கூடாது, என்ற அக்கறையுடன் காவல் துறையும், தமிழக அரசும், எச்சரிக்கையோடு செயல்பட வேண்டி இருக்கிறது பயங்கரவாதிகளுக்கு துணைபோகும் அமைப்புகளை தடை செய்ய வேண்டிய நேரம்தான் இது என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று அவர் கூறியிருக்கிறார்.