Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

விளக்கு ஏற்றும் முன் இதை செய்தால் லட்சுமி உங்கள் வீடு தேடி ஓடி வருவாள்!

God Lakshmi

God Lakshmi

விளக்கு ஏற்றும் முன் இதை செய்தால் லட்சுமி உங்கள் வீடு தேடி ஓடி வருவாள் என்பது ஐதீகம். அது என்னவென்றுதான் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

ஒவ்வொரு வீட்டில் உள்ள பெண்களும் விளக்கு ஏற்றுவது என்பது அவர்களின் தலையாய கடமை. மேலும் மாலை நேரங்களில் கட்டாயமாக பெண்கள் விளக்கேற்ற வேண்டும்.

விளக்கு ஏற்றுவதற்கு முன்பாக வீட்டை பெருக்கி சுத்தம் செய்ய வேண்டும் விளக்கை ஏற்றிவிட்டு சுத்தம் செய்வது கூடாது.
அதேபோல் விளக்கு ஏற்றுவதற்கு முன்பு தலைவாரி, முகம் கழுவி, மங்கல பொட்டிட்டு அதன் பின் தான் விளக்கேற்ற வேண்டும்.
நீங்கள் அன்றைக்கு துணி துவைத்து இருக்கிறீர்கள் என்றால்? காய்ந்த துணியை உள்ளே கொண்டு வந்த பிறகுதான் விளக்கேற்ற வேண்டும்.
விளக்கு ஏற்றுவதற்கு முன் வீட்டில் உள்ள அனைத்து மின் விளக்குகளையும் எரிய விடவேண்டும்.
பழங்காலத்தில் காலையில் எழுந்தவுடன் முதலில் கொல்லைப்புறம் உள்ள கதவை முதலில் திறந்து விட்டுவிட்டு அதன் பிறகு முன்னே உள்ள கதவை திறப்பார் அப்படி திறக்கும் பொழுது மகாலட்சுமியே வருவதாக நினைத்து திறப்பார்கள்.

அதேபோல் மாலையில் விளக்கேற்றும் பொழுது வாசப்படியில் உள்ள விளக்கை எரியவிட்டு மகாலட்சுமியே வருக என்று சொல்லி பூஜை அறைக்கு சென்று விளக்கை ஏற்ற வேண்டும்.

நகர்ப்புறங்களில் காம்பவுண்ட் சுவர்கள் போட்டு வைத்திருப்பார்கள். அப்படி போட்டு வைத்திருந்தால் முதலில் காம்பவுண்டு சுவர்களில் உள்ள விளக்கை போட வேண்டும். அதன் பிறகு வீட்டின் முன்னே உள்ள விளக்கை போட வேண்டும். அப்படியே வந்து ஹாலில் விளக்கை போட வேண்டும், சமையல் அறையில் விளக்கை போட்டுவிட்டு இப்படி மகாலட்சுமியை வீட்டின் வாசல் புறத்திலிருந்து பூஜை அறைக்கு வரை வரவழைத்து விளக்கை போட்டு விளக்கு ஏற்ற வேண்டும். இப்படி விளக்கு ஏற்றும் பொழுது விளக்கில் புகுவாள்.

மிக முக்கியமாக சமையல் அறை விளக்கு எரிய வேண்டும். எந்த ஒரு அறையும் இருட்டாக வைத்திருக்காதீர்கள்.

இப்படி நாம் விளக்கேற்றும்போது மகாலட்சுமி விருப்பம் போல் வந்து நம் வீட்டில் ஆட்சி புரிவாள்.

Exit mobile version