Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கண் கருவளையம் பிரச்சனையா? இதை செய்யுங்க உடனே மறைந்துவிடும்..!!

Kan Karuvalayam Neenga

Kan Karuvalayam Neenga: பொதுவாக ஆண், பெண் இருபாலருக்கும் இந்த பிரச்சனை இருக்கும் கண்களை சுற்றி கண்கருவளையம் வந்திருக்கும். இவைகள் பார்பதற்கு முகத்தின் அழகை குறைப்பது போல இருக்கும். ஒரு சிலர் கண்ணாடி போட்டு மறைத்தாலும், இந்த கருவளையத்தை முழுமையாக நீக்க சற்று கடினமாக தான் இருக்கும். ஏன் இந்த கருவளையம் வருகிறது. அதற்கான காரணம் என்ன? இதனை சுலபமான முறையில் எப்படி தடுக்கலாம் என்று (Eye Dark Circles removal remedy in tamil) பார்க்கலாம்.

கருவளையம் வருவதற்கான காரணம்

பொதுவாக கருவளையம் வருவதற்கான முதல் காரணம் என்னவென்று பார்த்தால் தூக்கமின்மை தான். ஒரு சிலர் இரவு கண்விழித்து வேலை பார்ப்பதால் அல்லது போதுமான அளவு கண்களுக்கு ஓய்வில்லாமல் இருப்பதாலும் இவ்வாறு ஏற்படலாம்.

கண்களுக்கு குறைந்தபட்சம் 7 முதல் 8 மணி நேரம் வரை உறக்கம் தேவைப்படும். அது கிடைக்காத பட்சத்தில் கண்களை சுற்றி இவ்வாறு கருவளையம் ஏற்படுகிறது. மேலும் பகல் பொழுதில் கம்ப்யூட்டரில் வேலை பார்த்துவிட்டு, இரவு அதிக நேரம் மொபைல் பார்த்தாலும் கண்களை சுற்றி இவ்வாறு கருவளையம் ஏற்படும்.

மேலும் இந்த பிரச்சனை மரபணு காரணமாக கூட வரலாம். பெற்றோர்களுக்கு இது போல கருவளையம் இருந்தால் பிள்ளைகளுக்கும் கருவளையம் வரும்.

தடுப்பது எப்படி?

முதலில் நன்றாக தூங்க வேண்டும். இரவு நேரங்களில் அதிகமாக மொபைல் பயன்படுத்தாமல் முன்னதாகவே தூங்க வேண்டும்.

பிறகு தண்ணீர் அதிகமாக குடிக்கவும். உடலில் நீர்ச்சத்து இல்லை என்றால் இவ்வாறு ஏற்பட வாய்ப்புள்ளது.

மேலும் உருளைக்கிழங்கு சாறு எடுத்து கண்களை சுற்றி தடவி மசாஜ் செய்து வர கருவளையம் வரமால் தடுக்கலாம். வைட்டமின் ஏ கேப்சூல் வாங்கி வந்து இரவு உறங்க செல்லும் முன் தடவி கொண்டு தூங்கினால் கண்கருவளையம் மறையும்.

தக்காளி சாறு எடுத்து கருவளையம் உள்ள இடத்தில் அப்ளை செய்து மசாஜ் செய்ய கருவளையம் மறையும்.

புதினா இலைகளை அரைத்து அதனை கண்களில் தடவி வந்தால் கருவளையம் மறையும்.

ரோஸ் வாட்டர் வாங்கி வந்து கண்களில் தடவி மசாஜ் செய்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி வர கருவளையம் மறையும்.

மேலும் படிக்க: Tomato Facial: பார்லர் செல்லாமல் இந்த தக்காளி பேசியல் செய்யுங்கள்.. உங்கள் முகம் ஜொலி ஜொலிக்கும்..!

Exit mobile version