Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கண் திருஷ்டி ஒழிய 3 பொருட்கள் கொண்ட பரிகாரம்..!

#image_title

கண் திருஷ்டி ஒழிய 3 பொருட்கள் கொண்ட பரிகாரம்..!

வாழ்வில் எதிர்மறை எண்ணங்கள், வீழ்ச்சியை ஏற்படுத்தக் கூடிய கண் திருஷ்டியால் பல குடும்பங்கள் கஷ்டத்தை அனுபவித்து வருகிறது.

நம் முன்னேற்றத்தை கண்டு பிறர் படும் பொறாமையே கண் திருஷ்டி… இந்த கண் திருஷ்டியில் இருந்து விடுபட நீங்க செய்ய வேண்டிய எளிய பரிகாரம் இதோ.

1)வெண் கடுகு

2)மிளகு

3)எலுமிச்சம் பழம்

ஒரு கிண்ணத்தில் வெண் கடுகை முக்கால் பங்கு நிரப்பிக் கொள்ளவும்.

அடுத்து 10 மிளகை அதில் சேர்க்கவும். இறுதியாக 1 எலுமிச்சம் பழத்தை போட்டு வீட்டில் அனைவரது கண் படும் இடத்தில் வைக்கவும்.

இந்த பரிகாரத்தை எந்த கிழமையில் வேண்டுமாலும் செய்யலாம்… உதாரணத்திற்கு புதன் கிழமை செய்கிறீர்கள் என்றால் வெள்ளிக் கிழமையில் அதை நல்லெண்ணெய் ஊற்றி எரித்து விட வேண்டும்.

அதாவது வெள்ளிக்கிழமை நாளில் அந்த கிண்ணத்தில் உள்ள எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி வலது, இடது என இரு புறமும் தூக்கி வீசவும்.

பிறகு வெண் கடுகு மற்றும் மிளகை ஒரு வெள்ளை காட்டன் துணியில் போட்டு முடிச்சி போட்டு வீட்டு வாசலில் வைக்கவும். பிறகு அதன் மீது நல்லெண்ணெய் ஊற்றி ஏறிய விடவும்.

இவ்வாறு செய்வதினால் வெண் கடுகு, மிளகு அனைத்தும் பொரிய ஆரம்பிக்கும். அதேபோல் நம் மீது விழுந்த கண் திருஷ்டியும் பொரிந்து விடும்.

Exit mobile version