பகைவர்களை காணாமல் போகச் செய்யும் பரிகாரம்!
பெரும்பாலானோருக்கு தொழிலில் பகைவர்கள் இருப்பது சாதாரண ஒன்று தான். நம் வீழ்ச்சியை காண பல சூழிச்சிகளை யோசிக்காமல் செய்யும் பகைவர்களை காணாமல் போகச் செய்யும் சக்தி வாய்ந்த பரிகாரம் இவை. இந்த பரிகாரத்தை வீட்டிலும் செய்யலாம்… தொழில் செய்யும் இடத்திலும் செய்யலாம்…
பரிகாரம் செய்யத் தேவைப்படும் பொருட்கள்… இலுப்பை எண்ணெய், பெரிய வெங்காயம், பஞ்சு திரி.
இலுப்பை எண்ணெய் தீபம் எதிரிகளின் தொல்லையில் இருந்து விடுபட வைக்கின்றது. இந்த தீபத்தை ஏற்றுவதற்கு முன்னர் வீட்டு பூஜை அறையை சுத்தமாக வைத்துக் கொள்ளவும்.
அடுத்து ஒரு பித்தளை தட்டில் ஒரு பெரிய வெங்காயத்தை வைத்து அதன் நடுவில் நறுக்கி அகலப்படுத்தவும்.
அதாவது இலுப்பை எண்ணெய் ஊற்றி திரி போட்டு விளக்கேற்றவும். இந்த தீபத்தை வாரத்தில் எந்த நாளில் வேண்டுமாலும் ஏற்றலாம். தீபம் ஏற்றிய பின்னர் தொழில் நல்ல முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என்றும் எதிரிகள் தொல்லை இருக்கக் கூடாது என்றும் மனதார வேண்டிக் கொள்ளவும். இந்த சக்தி வாய்ந்த தீபம் எதிரிகளை காணாமல் போகச் செய்து விடும்.