காலத்தால் அழிக்க முடியாத பாடல் வரிகள்! கவிஞரின் நினைவு நாள்!

0
156
Remembering memorable song lines of this poet

காலத்தால் அழிக்க முடியாத பாடல் வரிகள்! கவிஞரின் நினைவு நாள்!

தமிழ் சினிமாவில் பாடல் ஆசிரியர்கள் மற்றும் கவிஞர்கள் நிறைய பேர் உள்ளனர்.இவர்களில் மிக முக்கியமானவர் கவிஞர் நா.முத்துக்குமார்.இவரின் நினைவு நாள் இன்று.இவர் தன்னுடைய 41வது வயதில் மரணம் அடைந்தார்.இவர் காஞ்சிபுரத்தில் 1975ம் ஆண்டு பிறந்தவர்.இவர் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர் ஆவார்.சிறு வயது முதலே புத்தகம் வாசிப்பதில் ஈடுபாடு கொண்டவர்.

தொடக்கத்தில் இவர் தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனரான பாலு மகேந்திராவுடன் நான்கு வருடங்கள் பணியாற்றினார்.பிறகு 2000ம் ஆண்டு இயக்குனர் சீமான் இயக்கும் வீரநடை திரைப்படத்தில் பாடல் எழுதும் வாய்ப்பைப் பெற்றார்.மேலும் அஜித்குமார் நடித்த கிரீடம் படத்திற்கு வசனமும் எழுதியுள்ளார்.இவர் 2006ல் ஜீவலட்சுமி என்பவரை திருமணம் செய்தார்.

தமிழ் சினிமாவின் பாடல் ஆசிரியர்களில் தனக்கென்று ஒரு இடத்தை ரசிகர்கள் மனதில் தக்க வைத்துக் கொண்டார்.இவர் பல திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார்.காதல் பாடல்கள்,சோகப்பாடல்கள்,காதல் தோல்விப் பாடல்கள்,இளமைப் பாடல்கள்,அம்மா,அப்பா சென்டிமெண்ட் பாடல்கள் என எல்லா வகையான பாடல்களிலும் முத்திரை பதித்தவர் இவர்.இவரின் ஒவ்வொரு பாடல்களும் ஒருவிதம்,அத்தனையும் தனிரகம்.

கற்றது தமிழ்,வெயில்,சிவா மனசுல சக்தி,7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன்,கேடி பில்லா கில்லாடி ரங்கா,தங்க மீன்கள்,சைவம்,கஜினி,அயன்,எங்கேயும் எப்போதும்,வெப்பம்,சிவாஜி,பேரன்பு,தரமணி என பல படங்கள் வெற்றியடைய இவரின் பாடல் வரிகளே காரணம்.இவர் சிறந்த பாடலாசிரியருக்கான தமிழ்நாடு அரசு விருது,பிலிம்பேர் விருது,விஜய் அவார்ட்ஸ்,சைமா விருது,இந்திய அரசின் தேசிய விருது என எல்லா விருதுகளையும் பெற்றுள்ளார்.

இவர் காலத்தால் அழியாத கவிஞர் என்று தமிழ் சினிமா ரசிகர்கள் இவரை கொண்டாடி வருகின்றனர்.மேலும் இவரின் பாடல் வரிகள் தங்களுக்கு அருமருந்தாகவும் இருப்பதாக ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.