இ-பதிவு ரத்து! மீண்டும் எழுந்த குழப்பம்!

0
136

தமிழ்நாட்டில் நோய்த்தொற்றின் தாக்கம் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து வரும் 24ஆம் தேதி வரையும் ஊரடங்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருக்கிறது. தினசரி பாதிப்பு தொடர்ச்சியாக அதிகரித்து வருவதன் காரணமாகவே ஊரடங்கு கட்டுப்பாடுகளும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. தேனீர் கடைகள் செயல்படுவதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே அத்தியாவசிய தேவைகள் செயல்பட வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், தமிழகத்தில் நோய்த் தொற்றுகளைத் தடுக்கும் பொருட்டு மாவட்டங்களுக்கு உள்ளேயும், வெளியேயும், பயணம் செய்வதற்கான முன்பதிவு கட்டாயம் இந்த நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்திருக்கிறது.

திருமணம் மற்றும் நெருங்கிய உறவினர்களின் இழப்பு மருத்துவம் சார்ந்த சேவைக்கு மட்டுமே பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், விண்வெளியில் இணையதள பக்கத்தில் இருந்து திருமணத்திற்கான அனுமதி மட்டும் நீக்கப்பட்டிருக்கிறது. மருத்துவம் மற்றும் இறப்பு முதியவர்களுக்கு சிகிச்சை போன்றவைகளுக்கு மட்டுமே தற்சமயம் வீட்டு அதிபதி இணையதள பக்கத்தில் தேவை நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. திருமணம் என்ற பகுதி நேற்று திடீரென நீக்கப்பட்டது. இதன் காரணமாக பலரும் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். இந்த நிலையில் இன்று காலை மறுபடியும் காரணங்கள் பட்டியலில் திருமணம் சேர்க்கப்பட்டிருக்கிறது.

இதனைத் தொடர்ந்து பலரும் திருமணத்தை காரணமாக பதிவு செய்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், ஒருசில மணிநேரங்களில் மறுபடியும் திருமணம் என்ற காரணம் சேர்க்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக இனி மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இயலாத நிலை உண்டாகி இருக்கிறது. இது குறித்து அரசுத் தரப்பில் விளக்கம் அளிக்கப்படவில்லை. இதற்கிடையில் பலரும் போலியான திருமண அழைப்பிதழை சமர்ப்பணம் செய்து பதிவு பெற்று வருவதாக புகார் எழுந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.