20 ஆண்டுகளாக திருக்கோவிலுக்கு வாடகை பாக்கி!! பேருந்தை ஜப்தி செய்து அதிரடி நடவடிக்கை!!

0
191
Rent arrears for temple for 20 years!! Seize the bus and take action!!

20 ஆண்டுகளாக திருக்கோவிலுக்கு வாடகை பாக்கி!! பேருந்தை ஜப்தி செய்து அதிரடி நடவடிக்கை!!

சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள சுகவனேஸ்வரர் திருக்கோவிலுக்கு சொந்தமான இடம் சுப்பராயன் தெரு பகுதியில் அமைந்துள்ளது. அந்த இடத்தில் சுகவனேஸ்வரர் மோட்டார்ஸ் நிறுவனத்தின் அலுவலகம் செயல்பட்டு வந்தது. கடந்த 2001ஆம் ஆண்டில் இருந்து அலுவலகம் செயல்பட்டு வந்த நிலையில் வாடகை செலுத்தாமல் இருந்து வந்துள்ளனர்.

இது குறித்து பலமுறை தெரிவித்தும் வாடகை செலுத்தாததால் சேலம் அறநிலைத்துறை இணை ஆணையாளர் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது.வழக்கு விசாரித்த அறநிலைத்துறை இணை ஆணையாளரும் நீதிபதியுமான மங்கையர்க்கரசி கடந்த 20 ஆண்டுகளாக வாடகை செலுத்தாத சுகவனேஸ்வரா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு ஒரு கோடி ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

இந்த நிலையில் அபராத தொகை கட்டாத நிலையில் இன்று சேலம் டவுன் காவல்நிலையம் அருகே அயோத்தியாபட்டணத்தில் இருந்து சேலம் பழைய பேருந்து நிலையத்திற்கு வந்த தனியார் பேருந்தை சுகவனேஸ்வரர் திருக்கோவில் உதவி ஆணையாளர் ராஜா மற்றும் அதிகாரிகள் சுகவனேஸ்வரர் மோட்டார்ஸ் தனியார் பேருந்தை ஜப்தி செய்தனர். இதையடுத்து சுகவனேஸ்வரர் கோயில் வளாகத்திற்கு எடுத்து வந்து பேருந்தை நிறுத்திக் கொண்டனர். இதனால் இன்று பரபரப்பு நிலவியது.