Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நிதி அமைச்சர் வெளியிட்ட அறிக்கை! இந்த துறைகளுக்கு இவ்வளவு நிதியா?

Report issued by the Minister! Is there so much funding for these sectors?

Report issued by the Minister! Is there so much funding for these sectors?

நிதி அமைச்சர் வெளியிட்ட அறிக்கை! இந்த துறைகளுக்கு இவ்வளவு நிதியா?

இன்று தமிழகத்தின் 2021- 2022 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார். இதன் மூலம் புதிய திட்டங்கள் குறித்து அறிவித்த நிதி அமைச்சர் அதற்காக ஒதுக்கப்பட்ட நிதி விவரங்களையும் வெளியிட்டார்.

துறை ரீதியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட விவரங்கள் குறித்தும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இதுவே தமிழகத்தில் தாக்கல் செய்யப்பட்டமுதல் பேப்பர் இல்லா பட்ஜெட் என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். இதற்கு பல துறையினரும் பாராட்டு தெரிவித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் வளர்ச்சித் துறைக்கு ரூ.80 கோடி ஒதுக்கீடு.
 தொல்லியல் துறைக்கு ரூ.29 கோடி ஒதுக்கீடு.
 காவல் துறைக்கு ரூ.8,930 கோடி.
 தீயணைப்புத் துறைக்கு ரூ.405 கோடி ஒதுக்கீடு.
 நீதித் துறைக்கு ரூ.1,713 கோடி ஒதுக்கீடு.
 மீன்வளத் துறைக்கு ரூ.303 கோடி ஒதுக்கீடு.
 குடிசை மாற்று வாரியத்திற்கு ரூ.3,954 கோடி ஒதுக்கீடு.
 நெடுஞ்சாலைத்துறைக்கு ரூ.17,899 கோடி ஒதுக்கீடு.
 மின்சாரத்துறைக்கு ரூ.19,872 கோடி ஒதுக்கீடு.
 பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.32,599 கோடி ஒதுக்கீடு.
 உயர்கல்வித்துறைக்கு ரூ.5,369 கோடி ஒதுக்கீடு.
 மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு ரூ.18,933 கோடி ஒதுக்கீடு.
 சுற்றுலாத்துறைக்கு ரூ.187 கோடி ஒதுக்கீடு.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலனுக்காக ஒட்டு மொத்த நிதி ஒதுக்கீடு ரூ.4,142 கோடியாக உயர்வு.
பருவநிலை மாற்ற மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கையில் தனிக்கவனம் செலுத்துவதற்காக ரூ. 500 கோடி ஒதுக்கீடு.
விளையாட்டு மேம்பாட்டிற்கு ரூ.225 கோடி ஒதுக்கீடு.
Exit mobile version