குடியரசு தின விழா நிகழ்ச்சிகள் தமிழக அரசின் சார்பாக நேற்றைய தினம் சென்னை மெரீனா கடற்கரையில் காந்தி சிலை அருகே நடந்தது. அந்த சமயத்தில் இந்த ஆண்டிற்கான வீர தீர செயலுக்கான அண்ணா பதக்கம் போன்ற பல்வேறு விருதுகளை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.
வீரதீர செயல்கள் புரிந்த அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஒவ்வொரு வருடமும் குடியரசு தின விழாவில் அண்ணா பதக்கங்களை வழங்கி வருகின்றது. இந்த பதக்கம் பெற்றுக்கொள்வதற்கு 1 லட்சத்திற்கான காசோலையும் 9 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தங்க முலாம் பூசப்பட்ட பதக்கம் மற்றும் சான்றிதழை முதலமைச்சர் வழங்குவார் அந்த விதத்தில் இந்த ஆண்டும் அதே போன்ற நிகழ்வு நடைபெற்றது.
அந்த விதத்தில் இந்த வருடத்திற்கான இந்த பக்கத்திற்கு அரசு ஊழியர் பிரிவில் சென்னை கீழ்ப்பாக்கத்தில் சேர்ந்த காவல்துறை ஆய்வாளர் ராஜேஸ்வரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த வருடம் நவம்பர் மாதம் 11ஆம் தேதி அன்று கல்லறை தோட்ட வளாகத்தில் மயங்கி விழுந்து கிடந்த உதயகுமாரை மனிதாபிமானத்துடன் தோள்களில் சுமந்து சென்று ஆட்டோவில் ஏற்றி அருகில் இருக்கின்ற மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
ஓட்டேரி பகுதியில் நிவர் புயல் பாதுகாப்பு ரோந்து பணியில் ஈடுபட்ட சமயத்தில் இடிந்துபோன வீட்டிற்கு வரும் சிக்கி தவித்த கணேஷ் என்ற நபரை காவல்துறை ஆய்வாளர் ராஜேஸ்வரி காப்பாற்றியிருக்கிறார். அந்த பகுதியில் காணாமல் போன பழனி என்ற மாற்றுத்திறனாளி சிறுவனை 3 மணி நேரத்திற்குள் கண்டுபிடித்து பெற்றோர்களிடம் ஒப்படைத்திருக்கிறார். இந்த வீரதீர செயலுக்கான அவருக்கு அண்ணா பதக்கம் வழங்கப்பட்டது.
அரசு ஊழியர் பிரிவில் விழுப்புரம் மாவட்டம் ஆதியூர் திருப்பதியைச் சேர்ந்த தீயணைப்பு வீரர் ராஜீவ் காந்திக்கு அண்ணா பதக்கம் வழங்கப்பட்டது. திருவெண்ணைநல்லூர் டி அடையாரில் சென்ற நவம்பர் மாதம் பெய்த மழையின் போது ஆற்று வெள்ளத்தில் சிக்கி உயிருக்கு போராடிய 2 பேரை 24 மணி நேரமாகப் போராடி அவர்களை காப்பாற்றி கரை சேர்த்தார்.
கோயம்புத்தூர் மாவட்டம் சர்க்கார் சமூகத்தைச் சார்ந்த கால்நடை உதவியாளர் அசோகன் சின்ன தடாகம் பகுதியில் காட்டைவிட்டு வெளியேறி 7 பேரை கொண்றதுடன் மக்களுக்கு சேதங்களை உண்டாக்கிய சின்னத்தம்பி என்ற காட்டு யானையை குழு அமைத்து மிகப்பெரிய போராட்டத்திற்கு பிறகு தொடர்ந்து கண்காணித்து மயக்க மருந்து செலுத்தி பிடித்து ஆனைமலை டாப்சிலிப்பில் கொண்டு சென்றுவிட்டார்.
திருத்திய நெல் சாகுபடி தொழில் நுட்பத்தை கடைபிடித்து அதிக உற்பத்தி திறன் பெறும் விவசாயிகளுக்கான நாராயணசாமி நாயுடு உற்பத்திக்கான விருதை சேலம் மாவட்டம் பூலாம்பட்டி சார்ந்த ராமசாமி பெற்றுக்கொண்டார்.
கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்துவதில் மெச்சத்தக்க விதத்தில் பணிபுரிந்த காவலர்களுக்கு காந்தியடிகள் காவலர் பதக்கம் வழங்கப்படும், இந்த வருடம் இந்த விருதை சென்னை வடக்கு மண்டலம் மத்திய நுண்ணறிவுப் பிரிவு காவல்துறை கண்காணிப்பாளர் தட்சணாமூர்த்தி, வேலூர் மண்டலம் மத்திய நுண்ணறிவுப் பிரிவு காவல்துறை ஆய்வாளர் குமார், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அமலாக்கப்பிரிவு காவல்துறை ஆய்வாளர் சக்தி, திருச்சி மாவட்டம் முசிறி துணை ஆய்வாளர் சிதம்பரம், காஞ்சிபுரம் மாவட்ட அயல் பணி மத்திய நுண்ணறிவுப் பிரிவு அசோக் பிரபாகரன் உள்ளிட்டோர் பெற்றுக் கொண்டனர். இந்த விருதை பெறுவதற்காக உடல்நலக்குறைவு காரணமாக ஒரு சிலர் இந்த விழாவிற்கு வருகை தரவில்லை என்றும் சொல்லப்படுகிறது.