Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

குடியரசு தின விழா உளவுத்துறை செய்த எச்சரிக்கை! பாதுகாப்பு வளையத்திற்குள் தலைநகர்!

டெல்லியிலே குடியரசு தின விழாவின் அணிவகுப்பு நிகழ்வுகள் நடைபெற இருக்கின்ற விஜய் சவுக் பகுதியை சுற்றி இருக்கக்கூடிய 5 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டு இருக்கின்றன. பொதுமக்கள் அதிகமாக ஒன்றிணைய கூடிய இடங்களில் துப்பாக்கியுடன் துணை ராணுவ படையினர் தீவிரமான விருந்துகளில் ஈடுபட்டு வருகிறார்கள் .அதோடு தொடர்வண்டி நிலையங்கள், பஸ் நிலையங்கள், மற்றும் விமான நிலையங்களில் ,பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது. அந்தந்த பகுதிகளில் துப்பாக்கியுடன் காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்பு படையினர் போன்றோர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். அதோடு பல இடங்களில் பாதுகாப்பு படையினர் அந்தப் பகுதிகளை தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார்கள்.

தலைநகர் டெல்லியில் இருக்கக்கூடிய மிக முக்கியமான துணை மின் நிலையங்களில் எந்தவிதமான அசம்பாவித சம்பவங்களும் ஏற்படலாம் என்று இந்திய உளவுத்துறை எச்சரிக்கை செய்ததன் காரணமாக ,பாதுகாப்பு வழக்கத்தைவிட மிக தீவிரமாக செய்யப்பட்டிருக்கிறது. தலைநகர் டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் பகுதிகளில் எல்லாம் மிகத் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு ,அனைத்து பகுதிகளும் பாதுகாப்பு படையினர் வசம் கொண்டு வரப்பட்டிருக்கிறது. உத்தரபிரதேசம் ,அரியானா போன்ற அனேக மாநிலங்களிலிருந்து டெல்லிக்கு வரும் வாகனங்கள் எல்லாம் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டு பின்பு அனுப்பபடுவதாக தகவல்கள் கிடைத்திருக்கிறது.

Exit mobile version