தலைநகர் டெல்லியில் நாளைய தினம் இந்திய குடியரசு தின விழா நடைபெற இருக்கிறது இந்த நிகழ்ச்சியிலே,பழங்குடி வகுப்பைச் சார்ந்த ஒரு தம்பதிகள் பழங்குடியினர் சார்பாக பங்கேற்க இருக்கிறார்கள்.
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே இருக்கின்ற ஆறுகால் எனும் கிராமத்தைச் சார்ந்த கயம தாஸ் மற்றும் புஷ்பஜா என்ற தம்பதிகள் பழங்குடி இனத்தை சார்ந்த இந்த தம்பதிகள் கூலி வேலை பார்த்து வருகிறார்கள் என்று சொல்லப்படுகிறது. இவர்கள் அவர்கள் சார்ந்த பழங்குடி இன மக்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்காக உழைத்து வருவதாகவும் தெரிவிக்கிறார்கள். கூலி வேலை பார்த்து வரும் கயம தாஸ் அஞ்சல் மூலமாக இளங்கலை தமிழ் இலக்கியம் படித்து வருகின்றார். இவர் வனவாசி கேந்திரத்தில் பணிபுரிவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சூழ்நிலையில், நாளைய தினம் தலைநகர் டெல்லியில் நடைபெற இருக்கின்ற, குடியரசு தின விழா நிகழ்ச்சியில் பழங்குடியின மக்களின் சார்பில் இந்த தம்பதிகள் பங்கேற்பதற்காக தேர்வாகி இருக்கிறார்கள் கடலூரில் இருந்து சென்னை புறப்பட்ட இந்த தம்பதிகள் சென்னையில் இருக்கின்ற பழங்குடியினர் இயக்குனர் அலுவலக உதவியுடன் விமானம் மூலமாக டெல்லியைச் சென்றடைந்தார்கள்.
இதுதொடர்பாக, உரையாற்றிய கயம தாஸ் பலமுறை தொடர்வண்டியில் சென்றிருக்கிறோம், ஆனாலும் இன்றுதான் முதன் முறையாக ஆகாயம் மூலமாக பயணம் செய்ய இருக்கிறோம். குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்காக அங்கே ஜனாதிபதியை சந்திப்பதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கிறார்கள். இது மிகவும் சந்தோஷமாக உள்ளது. இந்த அழைப்பு எங்களுடைய சமுதாயத்திற்கு மகிழ்ச்சியும் பெருமையும் கொடுத்து இருக்கிறது என்று தெரிவித்தார்.