விவசாயிகளுக்கு நெல் கொள்முதல் நிலையத்தில் முன்னுரிமை வழங்க கோரிக்கை !!

0
111

தமிழக அரசின் நேரடிக் கொள்முதல் நிலையங்களில் வியாபாரிகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்பதாக விவசாயிகள் தரப்பில் புகார் வந்த வண்ணம் இருக்கின்றனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் சுமார் 113 இடங்களில் நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு இருக்கின்றன.இதுவரை ஒரு லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு நல்ல மகசூல் கிடைத்துள்ளதாக விவசாயிகள் அதிகம் நெல் கொள்முதல் நிலையத்திலேயே நம்பியுள்ளனர் .மேலும் நெல்லை கொள்முதல் செய்வதற்கு நெல் மூட்டைகளை முன்கூட்டியே கொள்முதல் நிலையம் கொண்டு சென்று அடுக்கி வைத்துள்ளனர்.

இதனால் 75 சதவீதம் நெல் கொள்முதல் நிலையங்களில் திறந்த வெளியாக உள்ளதால் கொள்முதல் செய்யும் நெல் மூட்டைகளை நிலையங்களுக்கு வெளியே இருக்கிறது

தற்பொழுது நெல் அறுவடை முடிந்து விட்ட நிலையில், நெல்லை வாங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு விவசாயம் கொள்முதல் நிலையங்களில் நெல்லை கொண்டுபோய் அடுக்கி வைக்கப்பட்டு காவல் காத்து வருகின்றனர். இதனால் நெல் மூட்டை மழையால் பாதிக்கப்பட்டு நேரும் அபாயம் உள்ளது. இதனால் விவசாயிகள் தார்ப்பாய் வாடகைக்கு எடுத்து , ஒரு நாளைக்கு ரூபாய் 250 வீதம் வாடகை கொடுத்து வருகின்றனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் நீரீடு கொள்முதல் நிலையத்தில் சுமார் 8000 முட்டைகளுக்கு மேல் விவசாயிகளால் அடிக்க வைக்கப்பட்டுள்ளது. மலையிலிருந்து நெல் மூட்டைகளை பாதுகாக்க விவசாயிகளுக்கு குறைந்த பட்சம் மூன்று ஆயிரத்திலிருந்து நான்காயிரம் வரை செலவாகி இருக்கிறது. தனியார் வியாபாரிகள் நீரிடுன் அரசின் நேரடி விற்பனை செய்வது வாடிக்கையாக இருந்துவருகிறது.

இந்த செயலுக்கு வியாபாரிகள் கொள்முதல் நிலையத்தில் ஊழியர்களிடம் முறையான பதில் எதுவும் கூறப்படவில்லை .ஏற்கனவே 30 நாட்கள் காத்திருந்த போதிலும், மேலும் தாமதமாக உள்ளதால் விவசாயிகள் பெரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.நெல் கொள்முதல் நிலையங்களில் அதிகபட்சமாக 10 ஆயிரம் நெல் மூட்டைகளை அடுக்கி வைக்கப்பட்டு மாதக்கணக்கில் காத்து கிடக்கின்றனர். ஒருசில விவசாயிகள் கொள்முதல் நிலையத்தில் நெல்லை அடிக்கி முடியாததால் வீட்டிலேயே அடுக்கி வைத்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இதனை மாவட்ட ஆட்சியர் கருத்தில்கொண்டு விவசாயிகளுக்கு நல்ல வழி காட்ட வேண்டும் என்றும், விவசாயிகளுக்கு நெல் கொள்முதல் நிலையங்களில் முன்னுரிமை அளிப்பது குறித்து விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் தரப்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.