தனியார் பள்ளிகளில் இலவச கல்வி பெற தேவைப்படும் ஆவணங்கள்?- அரசு அறிவிப்பு!

0
140

LKG முதல் 8 ஆம் வகுப்பு வரை தனியார் பள்ளிகளில் இலவச கல்வி பெற இலவச கல்வி மற்றும் கட்டாயக் கல்வி என்ற திட்டத்தின் கீழ் சேர்க்கை நடைபெற உள்ளது.தனியார் பள்ளிகளில் இலவச கல்வித் துறை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அரசு வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பரவி பல்வேறு தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. கடந்த ஒரு ஆண்டுக்கு மேல் பள்ளி கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அனைத்து பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் அடுத்த கல்வி ஆண்டிற்கான சேர்க்கை தொடங்கியுள்ளது.

இந்த நிலையில் அரசு தனியார் பள்ளிகளுக்கு விடுத்திருந்த அறிவிப்பின்படி ஜூலை 5 முதல் ஆகஸ்ட் 3 வரை அனைத்து தனியார் பள்ளிகளிலும் குலுக்கல் முறையில் இலவசக் கல்வி மற்றும் கட்டாயக் கல்வி என்ற திட்டத்தின் கீழ் சேர்க்கை நடைபெற உள்ளது. இது இணையதளத்தில் நடக்க உள்ளது என அறிவித்துள்ளது. rte.tnschools.gov.in என்ற இணையதளத்தில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

ஆகஸ்ட் 10ஆம் தேதி முதல் குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஆகஸ்ட் 14 ஆம் தேதிக்குள் மாணவர்கள் வந்து சேர வேண்டும். இல்லையெனில் அவர்களது பெயரை இணையதளத்தில் வெளியிடப்படும் என்று மெட்ரிகுலேஷன் இயக்கம் சொல்லியுள்ளது.

மேலும் அரசு மற்றும் மெட்ரிக்குலேஷன் இயக்கம் இலவச கல்வி மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் பயில வரும் மாணவர்களுக்கு தேவையான ஆவணங்களை வெளியிட்டு உள்ளது. நாளை முதல் ஆன்லைனில் நீங்கள் விண்ணப்பிக்க தொடங்கலாம்.

தேவையான ஆவணங்கள் பின்வருமாறு:

1. புகைப்படம்

2. பிறப்புச் சான்றிதழ்

3. ஆதார் அட்டை

4. குடும்ப அட்டை

5. வருமானச் சான்றிதழ்

6. சாதி சான்றிதழ்

7. இருப்பிட சான்றிதழ்

இவைகள் அனைத்தையும் முன்னரே ஏற்பாடு செய்து வைத்துக்கொண்டு rte.tnschools.gov.in என்ற இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்கலாம்.