Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மணிப்பூரில் உள்ள தமிழர்கள் 4000 பேர் மீட்பு பணி !! அதிகாரிகள் அடங்கிய குழு வன்முறை மாநிலத்திற்கு விரைகிறது!! 

Rescue mission of 4000 Tamils ​​in Manipur!! A team of officers rushes to the state of violence!!

Rescue mission of 4000 Tamils ​​in Manipur!! A team of officers rushes to the state of violence!!

மணிப்பூரில் உள்ள தமிழர்கள் 4000 பேர் மீட்பு பணி !! அதிகாரிகள் அடங்கிய குழு வன்முறை மாநிலத்திற்கு விரைகிறது!!

மணிப்பூர் மாநிலத்தில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினர்கள் பழங்குடியினர் அந்தஸ்து வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து குகி பழங்குடியினர் போராட்டம் நடத்தினார்.  அதனையடுத்து மணிப்பூரில் இரண்டு பழங்குடியினர்  இடையே மோதல் ஏற்பட்டு வன்முறையாக வெடித்தது. இந்த வன்முறை சம்பவம் இரண்டு மாதங்களாக நடந்து வருகிறது.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் இரண்டு பழங்குடியின பெண்களை ஒரு கும்பல் நிர்வாணமாக வீதிகளில் அழைத்துச் செல்வது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது. இந்த கும்பல் அந்தப் பெண்கள் இருவரையும் வயல்வெளியில் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளது. இந்த சம்பவம் நாட்டிற்கு அவமானத்தை  ஏற்படுத்தியது.

இந்த சம்பாவத்திற்கு கண்டனம் தெரிவித்து  நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் இன்னும் மணிப்பூரில் தொடர்ந்து வருகிறது. அதனால் அங்கு உள்ள மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். மேலும் வன்முறை நடைபெற்ற பகுதியில் தமிழர்கள் உள்ளதாக தகவல் வெளிவந்தது.

இந்த நிலையில் மணிப்பூர் மாநிலத்தில் தமிழர்கள் 4000 பேர் உள்ளதாக தகவல் வந்துள்ளது. மேலும் இந்த வன்முறையால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் நிலை குறித்து தெரிந்து கொள்ள மணிப்பூர் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. தற்போது அவர்களின் நிலைமையை அறிய தமிழக அமைச்சர் தலைமையில் ஐஏஎஸ் அதிகாரிகள் அடங்கிய குழு மணிப்பூர் விரைவில் செல்ல உள்ளதாக தகவல் வந்துள்ளது.

Exit mobile version