Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

திருவண்ணமலை கிரிவலப் பாதையில் பிச்சை எடுத்து கொண்டிருந்த குழந்தைகள் மீட்பு!!

#image_title

திருவண்ணமலை கிரிவலப் பாதையில் பிச்சை எடுத்து கொண்டிருந்த குழந்தைகள் மீட்பு!!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலானது உலக பெயர் பெற்ற ஒரு கோவிலாகும். நேற்று புரட்டாசி மாத பவுர்ணமி என்பதால் அங்கு கிரிவலம் செல்லும் மக்களின் எண்ணிக்கை சற்று அதிகரித்தே காணப்படும்.

இதனை சாதகமாக கொண்டு அங்கு ஏராளமான குழந்தைகள் கிரிவல பாதையில் பிச்சை எடுத்து கொண்டிருந்தனர்.இதை பார்த்த சமூக நலத்துறை அதிகாரிகள் நேற்று போலிசாரின் உதவியுடன் கிட்ட தட்ட ஒரு 20 குழந்தைகளை கையகப்படுத்தினர்.

அந்த குழந்தைகளிடம் போலீசார் விசாரித்த போது அவர்கள் அனைவரும் ஆந்திரா, மற்றும் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர்கள் எனத் தெரிய வந்தது. மேலும் இந்த குழந்தைகள் அனைவருமே அவர்களது பெற்றோர்கள் சொல் படி தான் பிச்சை எடுக்க வந்தோம் என விசாரணையில் ஒப்புக்கொண்டனர்.

இதனை தொடர்ந்து அந்த குழந்தைகள் அனைவரையும், போலீசார் அவர்களது பெற்றோர்களிடமே ஒப்படைத்து விட்டு.இதை போல் தொடர்ந்து பெற்ற பிள்ளைகளை ,பிச்சை எடுக்க வைத்து, காசு சம்பாரிக்கும் பெற்றோர்களுக்கு, தகுந்த தண்டனை மற்றும் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை அளித்துவிட்டு வந்தனர்.

Exit mobile version