ஒடிசா இரயில் விபத்தின் மீட்பு பணிகள் நிறைவு! இரயில்வே நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு!!

0
292
#image_title

ஒடிசா இரயில் விபத்தின் மீட்பு பணிகள் நிறைவு! இரயில்வே நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு!

ஒடிசாவில் நடந்த இரயில் விபத்தில் நடைபெற்று வந்த மீட்பு பணிகள் நிறைவடைந்து விட்டதாகவும் இரயில் பாதை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் இரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

நேற்று அதாவது ஜூன் 2ம் தேதி வெள்ளிக் கிழமை இரவு 7.20 மணியளவில் ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே மூன்று இரயலிகள் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 280க்கும் மேற்பட்டோர் விபத்தில் சிக்கி உயிரிழந்ததாகவும், 900க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாகவும் தகவல் வெளியானது.

இதையடுத்து இரயில்வே, மத்திய, மாநில மீட்பு படையினர் ஒடிசா மாநிலத்தில் விபத்து நடந்த இடத்திறாகு சென்று மீட்பு பணியூ மேற்கொண்டு வந்தனர். அந்த மீட்பு பணி தற்போது நிறைவடைந்ததாக இரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதையடுத்து இரயில்வே நிர்வாக செய்தி தொடர்பாளர் அமிதாப் சர்மா அவர்கள் “3 ரயில்கள் மோதிய இடத்தில் மீட்பு பணி நிறைவடைந்துள்ளது. விபத்து நடந்த இடத்தில் தண்டவாளத்தை சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இரயில் விபத்தை தடுக்கும் கவாச் பாதுகாப்பு அமைப்பு பாலசோர் வழித்தடத்தில் இல்லை” என்று கூறினார்.