அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கடத்தப்பட்ட 8 மாத குழந்தை உட்பட நான்கு இந்திய வம்சாவழியைச் சேர்ந்தவர்களை மெர்சிட் கவுண்டி போலீசார் சடலமாக மீட்டுள்ளனர். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தைச் சார்ந்த ஜஸ்தீப்சிங், மனைவி ஐஸ்வின் கவுர், இவர்களுடைய 8 மாத குழந்தை அரூஹி தேரி மற்றும் அமந்தீப் சிங் என்ற 4 பேர் கடத்திச் செல்லப்பட்டனர்.
நெடுஞ்சாலையில் அவர்கள் பணியாற்றும் இடத்திற்கு அருகே அவர்களை கடத்தல்காரர்கள் வலுக்கட்டாயமாக கடத்திச் சென்றதாக தெரிகிறது அவர்களிடம் ஆய்வுகள் இருப்பதாகவும் ஆபத்தானவர்கள் என்றும் தெரிவித்த காவல்துறையினர் விசாரணை நடந்து வருவதால் மேற்கொண்டு தகவல் எதுவும் தெரிவிக்க முடியாது என்று மறுத்துவிட்டனர்.
எதன் காரணமாக அவர்கள் கடத்தப்பட்டார்கள்? கருதாலகாரர்களின் நோக்கம் என்ன? என்பது தொடர்பாக வெளியில் தெரிவிக்காத காவல்துறையினர் குற்றவாளிகளை அடையாளம் கண்டால் பொதுமக்கள் அவர்களை அணுகாமல் தொலைபேசி மூலமாக தகவல் தெரிவிக்குமாறு அறிவுறுத்தினர்.
இந்த நிலையில் கடத்திச் செல்லப்பட்ட இந்திய வம்சாவியைச் சார்ந்த குடும்பத்தினர் காவல் துறையினரை தொடர்பு கொண்டு அவர் தன்னுடைய குற்றத்தை ஒப்புக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து இன்று 8 மாத குழந்தை உட்பட 4 இந்திய வம்சாவளியைச் சார்ந்தவர்களை மெர்சிட் கவுண்டி காவல்துறையினர் சடலமாக மீட்டுள்ளனர்.