இந்தியாவில் இட ஒதுக்கீடு சிலவராட்சிக்கும், ஏகபோக உரிமைக்கு எதிரானது !மனுதாரர் வாதம்!

0
264

இந்தியாவில் இட ஒதுக்கீடு சிலவராட்சிக்கும், ஏகபோக உரிமைக்கு எதிரானது !மனுதாரர் வாதம்!

பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு. லலித் தலைமையிலான அரசியல்சாசன அமர்வு முன் நடைபெற்று வருகிறது.

பொருளாதாரத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு என்றால், சாதிபாகுபாடின்றி அனைத்து ஏழைகளுக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும்.

மனுதாரர் சார்பில் மூத்த வழக்குரைஞர் மோகன் கோபால் முன் வாதங்கள் வருமாறு:
இந்தியாவில் இடஒதுக்கீடு சிலவராட்சிக்கும், ஏகபோக உரிமைக்கும் எதிரானது.

பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் அரசமைப்பு சட்டத்தின் 103-ஆவது திருத்தம் ஜனநாயகத்துடனான சிலவராட்சிக்கு உதவுகிறது. வசதிபடைத்த சிறப்புரிமை படைத்தவர்கள் இடஒதுக்கீட்டை பொருளாதார மேம்பாடாக பார்க்கின்றனர். பொருளாதரத்தில் நலிவுற்ற பிரிவினருக்கு வழங்கப்பட்டுள்ள இடஒதுக்கீட்டில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். பின்தங்கிய பிரிவினருக்கான சமவுரிமைகளையும், வாய்ப்புகளையும் மறுத்தல் என்பது அரசமைப்பின் அடையாளத்தின் எண்ணத்தை மாற்றும்.

எந்தவொரு இடஒதுக்கீடும் உண்மையிலேயே, பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினருக்கு பயனளித்தால், அது வரவேற்ககூடியதே. முன்னேறிய பிரிவில் உள்ள ஏழைகளுக்கு இடஒதுக்கீடு கூடாது என்றும் கூறவில்லை.

வேலைவாய்ப்பில் பிரதிநிதித்துவத்தை எதிர்நோக்குகிறேமே தவிர, இடஒதுக்கீட்டை அல்ல. இடஒதுக்கீட்டை காட்டிலும் பிரதிநிதித்துவத்துக்கான சரியான ஏற்பாட்டை கொண்டு வந்தால், இடஒதுக்கீட்டை அரபிக் கடலில் தூக்கியெறிவோம் என வாதிட்டார்.