Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

குட் நியூஸ்..!! அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் இட ஒதுக்கீடு வழங்க முடிவு..! அதிரடியான அறிவிப்பு!

புதுச்சேரியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10% இட ஒதுக்கீடு வழங்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதல் அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

மருத்துவ படிப்பில் சேருவதற்காக நடத்தப்படும் நீட் தேர்வால், அரசு பள்ளி மாணவர்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த தேர்வை எதிர்கொள்ள பயந்து பல மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்களும் நிகழ்ந்துள்ளது. இதனால் இந்த தேர்வுக்கு எதிராக பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்தத் தேர்வுக்கு எதிராக குரல் கொடுத்ததில் புதுச்சேரி மாநில முதலமைச்சர் நாராயணசாமியும் ஆவார். தமிழகத்தைப் பொறுத்தவரை அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% இட ஒதுக்கீடு வழங்க சட்ட மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால், இந்த மசோதா தற்போது ஆளுநரின் பரிசீலனையில் இருக்கிறது.

இந்நிலையில், புதுச்சேரியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10% இட ஒதுக்கீடு வழங்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ள்ளார். நீட் தேர்வை பொறுத்தவரை புதுச்சேரி அரசு பள்ளி மாணவர்களை காட்டிலும் தனியார் பள்ளி மாணவர்களே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதனைக் கருத்தில் கொண்டே அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

Exit mobile version