வன்னியர் இட ஒதுக்கீடு: பாமக உறுப்பினர் சொல்வது போல செய்ய முடியாது – அமைச்சர் ராஜகண்ணப்பன்

0
208
#image_title

வன்னியர் இட ஒதுக்கீடு: பாமக உறுப்பினர் சொல்வது போல செய்ய முடியாது – அமைச்சர் ராஜகண்ணப்பன்

வன்னியர் இட ஒதுக்கீடு விவகாரத்தில் பாமக உறுப்பினர் GK மணி சொல்வது போல ஒரு மாதத்தில் தரவுகள் எடுக்க முடியாது. பொறுத்தார் பூமி ஆள்வார் என அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

மேலும் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு விவகாரத்தில் எடுத்தோம் கவிழ்த்தோம் என அரசு செயல்பட முடியாது. பொறுத்தார் பூமி ஆள்வார் என அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் பிற்படுத்தப்பட்டோர் மிக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதங்களுக்கு பிறகு அமைச்சர் ராஜகண்ணப்பன் பதிலுரை வழங்கினார்.

அப்போது பேசிய அவர், இட ஒதுக்கீடு விவகாரத்தில் ஒன்றிய அரசு மாநில அரசுடன் இணைந்து தேசிய அளவில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் . அப்போது தான் யார் யார் எந்தெந்த சமூகம் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதை கண்டறிய முடியும் . அவர்களுக்கு எந்த அடிப்படையில் இட ஒதுக்கீடு கொடுப்பது என்பது குறித்து முடிவுக்கு வர முடியும்.

அரசு எந்த சமூகத்துக்கும் விரோதி அல்ல. சமூக நீதி ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதில் அரசு தெளிவாக உள்ளது. வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதில் அரசுக்கு எந்த கருத்து மாறுபாடும் இல்லை.

சமூக பொருளாதார நிலை, கல்வி, வேலைவாய்ப்பு, எண்ணிக்கை அடிப்படையில் இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும். தனிப்பட்ட அடிப்படையில் இட ஒதுக்கீடு கொடுக்கக் கூடாது , தரவுகள் முக்கியம் என நீதிமன்றம் தெரிவிக்கிறது.

எனவே பா.ம.க உறுப்பினர் மணி சொல்வதை போல தரவுகள் ஒரு மாதத்தில் எல்லாம் எடுக்க முடியாது. பொறுத்தார் பூமி ஆள்வார் எனவே கொஞ்சம் பொறுக்க வேண்டும் என கூறினார்.