Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ரிசர்வ் வங்கி எடுத்த அதிரடி முடிவு:?

இந்திய ரிசர்வ் வங்கியின் மதிப்பு நிதிக் கொள்கை கூட்டம் வருடத்திற்கு ஆறுமுறை நடைபெறும் அதாவது இறுமாதத்திற்கு ஒருமுறை ஆய்வுக்கூட்டம் கூட்டப்படும்.இந்த கூட்டத்தின்போது முக்கிய கடனுக்கான வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி முடிவு செய்யப்படும் .இந்நிலையில் இந்த நிதியாண்டின் ரிசர்வ் வங்கி இரண்டாவது கூட்டம் நான்காம் தேதி தொடங்கி நேற்று முடிவடைந்தது.

இந்த வருடத்திற்கான முதல் கூட்டம் நடந்த பிப்ரவரி மாதத்தில் இந்திய ரிசர்வ் வங்கி முக்கிய கடனுக்கான வட்டியை 1.15 சதவீத மாக குறைத்துள்ளது. தற்போது ரெப்போ ரேட் 4 சதவீதமாகவும், ரிவர்ஸ் ரெப்போ ரேட் 3.35 சதவீதமாகவும் உள்ளது. தற்போது சில்லரை விலை பணவீக்கம் அதிகமாக உள்ளது.

கொரோனாவால் இது தொடர்ந்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.இதனால் ரிசர்வ் வங்கி நிதிக்கொள்கை ஆய்வுக் கூட்டத்தில் கடனுக்கான வட்டி கிடைக்காது என்றே பலரும் எதிர்பார்த்திருந்தனர்.அதைப்போலவே ரிசர்வ் வங்கி கடனுக்கான வட்டியை குறைக்க வில்லை.இந்த சூழ்நிலையில் அக்டோபர் மாதம் வரை ரிசர்வ் வங்கி குறைக்க வாய்ப்பே இல்லை என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கோடக் மகிந்திரா வங்கியின் உபஸ்னா பரத்வாஜ் அவர்கள் கூறுகையில் ,குறைந்தபட்சமாக அக்டோபர் மாதம் வரை ரிசர்வ் வங்கி கடனுக்கான வட்டியை குறைக்க வாய்ப்பில்லை என தெரிவித்தார். மேலும் இது பற்றிய கருத்துக்களை அக்குட் ரேட்டிங்ஸ் மற்றும் ரிசர்ச் நிறுவனத்தின் சுமன் சவுத்ரி கூறுகையில், ரெப்போ ரேட் கிட்டத்தட்ட மிகவும் குறைந்த அளவில் இருப்பதாகவும், அடுத்த 6 மாதங்களில் ரிசர்வ் வங்கி 0.25 சதவீதம் முதல் 0.50 சதவீதம் வரை குறைக்கவாய்ப்புள்ளது என கருத்து தெரிவித்தனர்.

Exit mobile version