நேற்று ராஜினாமா இன்று பதவியேற்பு! என்ன நடக்கிறது பிஹார் மாநிலத்தில்?

0
138

பீகார் மாநிலத்தில் அந்த மாநில முதலமைச்சராக இருந்த நிதிஷ்குமார் தன்னுடைய பதவியை நேற்று திடீரென்று ராஜினாமா செய்திருக்கிறார். மாநிலத்தில் அண்மைக்காலமாக ஆளும் ஐக்கிய ஜனதா தளம் பாஜக கூட்டணியிடையே கடுமையான மோதல்கள் ஏற்பட்டு வந்த சூழ்நிலையில், பிஹார் மாநில முதலமைச்சர் பதவியிலிருந்து நிதிஷ்குமார் ராஜினாமா செய்தார்.

பீகார் மாநிலத்தில் கடந்த 2020 ஆம் வருடம் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பாஜக மற்றும் ஜே.டி.யு கட்சிகள் கூட்டணியமைத்து தேர்தலை சந்தித்தனர். இந்த தேர்தலில் பாஜக 77 இடங்களிலும், ஜேடியு 45 இடங்களிலும், வெற்றி பெற்றனர்.

ஆனாலும் தேர்தலுக்கு முந்தைய ஒப்பந்தத்தினடிப்படையில் ஜே.டி.யு தலைவர் நிதீஷ் குமார் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

பாஜகவுடன் தொடர்ச்சியாக கருத்து வேறுபாடுகள் நிலவிய சூழ்நிலையில், அந்த கட்சியுடனான கூட்டணியை முறித்துக் கொள்வதாக நிதீஷ்குமார் நேற்று திடிரென்று அறிவிப்பு வெளியிட்டார், அதன் பிறகு தன்னுடைய முதல்வர் பதவியையும் ராஜினாமா செய்தார் என சொல்லப்படுகிறது.

பாஜகவை விட்டு விலகி வந்த அந்த கட்சி ஆர் ஜே டி, காங்கிரஸ், இடதுசாரிகள் கூட்டணி ஆதரவு வழங்கியிருக்கிறது. அதன்பிறகு நிதீஷ்குமார் ஆளுநரை சந்தித்து மறுபடியும் புதிய ஆட்சியை அமைக்க உரிமை கூறினார். இதற்கு நடுவே பாட்னாவில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் நிதீஷ்குமார் அந்த மாநிலத்தின் முதலமைச்சராக 8வது முறையாக பதவியேற்கவிருக்கிறார்.