canada: கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பிரதமர் பதவியை ராஜினாமா செய்து கொள்வதாக அறிவித்துள்ளார். மேலும் இதற்கு பல்வேறு வகையான காரணங்கள் கூறப்படுகிறது. அதில் உட்கட்சி மோதல் மற்றும் நிதி வகையான பிரச்சனைகள், அவர் மேற்கொண்ட மசோதாவை நிறைவேற்ற முடியாதது இதன் காரணங்களாக பதவி விலகியதாக கூறப்படுகிறது.
இதில் முதலாவதாக நிதியமைச்சர் ஃப்ரீலாண்ட் தனது பதவியை ராஜினாமா செய்து கொண்டார். அதனை தொடர்ந்து பல பிரச்சனைகள் நிதி வகையில் எழுந்த நிலையில் அடுத்து இவரும் ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது. எனினும் இவர் பதவி விலகியதை முக்கிய காரணமாக வேறு ஒரு காரணமும் கூறப்படுகிறது.
கனடாவில் உள்ள சீக்கிய தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் என்பவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சுட்டுக்கொல்லப்பட்டார். இதன் பின் இந்தியா இருக்கலாம் என்ற ஒரு தகவலை கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியா மீதான புகார்களை அடுக்கி கொண்டே சென்றார். இந்நிலையில் ஜி 20 மாநாட்டில் இது குறித்து மோடியிடம் விவாதத்தை மேற்கொண்டார்.
இந்த கொலைக்கு பின் இந்தியா உள்ளது என தனது நாடு பாதுகாப்பு மைய ஆலோசகர் கூறினார் என்று அவர் கூறினார். ஆனால் இந்தியா வுக்கும் இந்த கொலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என கூறி வந்தது.இதனை தொடர்ந்து தற்போது அவர் பதவி விலகியதை பாஜகவினர் கொண்டாடி வருகின்றனர். இந்தியாவை சீண்டினால் மேலும் மோடியை சீண்டினால் இதுதான் கதி என்று கொண்டாடி வருகின்றனர்.