Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பதவி விலகும் கனடா பிரதமர்.. அமெரிக்காவுடன் இணைகிராதா?? வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள்!!

Resigning Prime Minister of Canada

Resigning Prime Minister of Canada

canada: தற்போதைய கனடா வின் பிரதமர் ஜஸ்டின் ட்ருட்டோ பதவி விலக உள்ளதாக தகவல்கள் வளியாய் வருகின்றன.

கனடாவில் இந்த ஆண்டில் அக்டோபர் மாதத்தில் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. இவ்வாறு தேர்தல் நடைபெறும் நேரத்தில் தற்போது இருக்கும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருட்டோவுக்கு பல்வேறு பக்கங்களில் இருந்தும் பல்வேறு வகையான நெருக்கடிகள் இருந்து வருகின்றன. அவர் மேலும் உள்நாட்டு அரசியலிலும் சிக்கல்களை சந்தித்து எதிர்கொண்டு வருகிறார்.அவர் இன்னும் ஒரு வாரத்தில் பதவி விலக உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றது.

ஹர்தீப் சிங் நிஜ்ஜார் என்ற ஒரு இயக்கத்தின் தலைவர் இந்திய அரசால் தடைசெய்யப்பட்டவர். இவர் கடந்த ஆண்டு மர்ம நபர்களால் கொல்லப்பட்டார். இந்த கொலைக்கும் இந்தியாவுக்கும் தொடர்பு உள்ளதாக கனடா அரசு குற்றச்சாட்டு முன் வைத்தது. இந்திய அரசும் அதற்கு மறுப்பு தெரிவித்து கடுமையான கண்டனகளை தெரிவித்து வந்தது.

மேலும் அமெரிக்க அதிபர்ராக் இந்த மாதம் பதவி ஏற்க உள்ள டொனல்ட் டிரம்ப் கனடாவை அமெரிக்காவுடன் இணைக்கப்படும் என்றபடி கருத்துக்களை பகிர்ந்து வந்தார். மேலும் அவர் x தள பக்கத்தீல் நாங்கள் ஆண்டுதோறும் 10 கோடி டாலர் மானியம் வழங்குகிறோம். பல கனடா மக்களே அமெரிகாவில் ஒரு மாநிலமாக் இணைய வேண்டும் என்று விரும்புகிறார்கள். இது மிகச்சிறந்த யோசனை என நான் நினைகிறேன் என்று கூறியிருந்தார்.

தற்போது உள்ள கனடா பிரதமர் ட்ருட்டோ அமைச்சரவையில் இருந்து முக்கிய அமைச்சர்கள் பதவி விலகினார். அரசாங்கத்துக்கு ஆதரவு அளித்து வந்த ஜனநாயக கட்சி தற்போது ஆதரவை மறுத்துள்ளது. ஜஸ்டின் ட்ருட்டோ பதவியை முடிவுக்கு கொண்டு வர நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரபோவதாக என் டி பி தெரிவித்துள்ளது. 2019 முதல் 2021 வரை ட்ருட்டோவின் கட்சிக்கு பெரும்பான்மை இல்லை வேறு கட்சியின் ஆதரவுடன் தான் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version