ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிரான தீர்மானம்! சட்டசபையில் அடுத்த அதிரடி!

0
304
#image_title

ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிரான தீர்மானம்! சட்டசபையில் அடுத்த அதிரடி!

ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிரான தீர்மானத்தை சட்டசபையில் இன்று மு க ஸ்டாலின் முன்மொழிகிறார்.

2024 சட்டசபை கூட்டுத்தொட தொடங்கி மூன்றாவது நாளான இன்று ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிரான தீர்மானங்கள் விவாதிக்கப்பட உள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது நாடாளுமன்ற தேர்தலும் சட்டமன்றத் தேர்தலும் ஒரே நாளில் நடப்பதாகும். இவ்வாறு ஒரே நாளில் நடக்கும் போது தேர்தலுக்கான செலவுகள் குறைக்கப்படுவதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. ஆனால் முன்னதாகவே 1967-ம் ஆண்டு ஒரே நாடு ஒரே தேர்தல் முறையில் தேர்தல் நடத்தப்பட்டது. அதன் பிறகு சில காரணங்களால் 1968 மற்றும் 1969 ஆம் ஆண்டுகளில் அந்த முறை பின்பற்றப்படாமல் நாடாளுமன்ற தேர்தல் சட்டமன்ற தேர்தல் தனித்தனியாகவே நடைபெற்றது.

ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது மக்களாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்பதாலும், நடைமுறைக்கு சாத்தியம் இல்லாதது என்பதாலும், இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் வகுக்கப்படாதது என்பதாலும் இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கூடாது என தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் மக்கள் தொகை கணக்கின் அடிப்படையில் தொகுதி மறு சீரமைப்பு நடவடிக்கையை கைவிட வேண்டும் என இரண்டாவது தீர்மானமும் வலியுறுத்தப்பட உள்ளது.