Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானம்! கட்சியிலிருந்து ஓபிஎஸ் அதிரடி நீக்கம்!

அதிமுகவின் பொதுக்குழு தற்போது சென்னை மாநகரத்தில் உற்சாகமான நிலையில் நடைபெற்று வருகிறது. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார்.

இதனை தொடர்ந்து இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை முன்னணி தலைவர்கள் வாழ்த்தி பேசி வந்தார்கள்.

அந்த சமயத்தில் பன்னீர்செல்வத்தை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்று அதிமுகவின் பொதுக்குழுவில் இருக்கின்ற ஏராளமான உறுப்பினர்கள் தொண்டர்கள் உள்ளிட்டவரும், வழக்கம் எழுப்பினர். இந்தநிலையில், அப்போது மேடையில் பேசிக் கொண்டிருந்த நத்தம் விஸ்வநாதன் பொதுக்குழு உறுப்பினர்களாகிய உங்களுடைய கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று தெரிவித்தார்.

இந்த நிலையில், சற்று நேரத்திற்கு பிறகு அதிமுகவிலிருந்து பன்னீர்செல்வத்தை நீக்குவதற்காக பொதுக்குழுவில் சிறப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டிருக்கிறது.

அதிமுகவின் கொள்கைகளுக்கும், கோட்பாடுகளுக்கும், விரோதமான முறையில் செயல்பட்ட பொருளாளர் பன்னீர்செல்வம் கட்சியை பலவீனப்படுத்தும் விதமாக திமுக அரசுடன் நட்பு பாராட்டிக் கொண்டிருக்கிறார். காவல் நிலையத்தில் புகார் வழங்கி அதிமுகவின் சட்ட விதிகளுக்கு முரணாக நடந்து கொண்டிருக்கிறார்.

அதோடு கட்சியினர் மீது வழக்கு தொடர்ந்து சுயநலன் சார்ந்து அதிமுக கட்சி விதிகளுக்கு எதிராக செயல்படுகிறார் கட்சி விதிகள் கோட்பாடுகளுக்கு எதிராக செயல்பட்ட அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று நத்தம் விஸ்வநாதன் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொதுக்குழுவில் ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.

அதோடு கட்சியின் பொருளாளர் மற்றும் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் பன்னீர்செல்வம் நீக்கப்படுகிறார். அவருடன் அதிமுகவை சார்ந்த யாரும் எந்தவிதமான தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என்ற அறிவிப்பையும் வெளியிட்டார்.

அப்போது பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் உள்ளிட்டவர் கரகோஷங்களை எழுப்பி தங்களுடைய மகிழ்ச்சியையும் ,ஒப்புதலையும், வழங்கினார்கள்.

Exit mobile version