Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

திமுகவில் ஆ.ராசா மற்றும் பொன்முடிக்கு முக்கிய பொறுப்புகள் – கட்சியில் புதிய விதிகளுடன் தெறிக்கவிடும் ஸ்டாலின்

திமுகவில் ஆ.ராசா, பொன்முடி ஆகியோருக்கு முக்கிய பதவிப் பொறுப்புகள் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

காணொளிக் காட்சி வாயிலாக நடைபெறவுள்ள திமுக பொதுக்குழுவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என கட்சியில் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், கட்சியில் முன்னமே துணை பொதுச் செயலாளர் பதவிக்கு 3 பேர் இருக்க வேண்டும் என்ற விதி இருந்து வருகிறது.

 

இந்த விதியினை மாற்றம் செய்து அந்த பதவிகளுக்கு 5 பேரை நியமிக்கலாம் என திருத்தம் மேற்கொள்ளப்பட இருப்பதாகவும் தகவல்கள் தெரிவின்றன.

ஏற்கனவே துணை பொதுச் செயலாளர்களாக ஐ.பெரியசாமி, அந்தியூர் செல்வராஜ், சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆகியோர் கட்சிப் பதவியில் உள்ளனர்.

 

கட்சியில் உள்ள விதியினை திருத்தம் செய்வதன் மூலம் ஆ.ராசா மற்றும் பொன்முடி ஆகியோருக்கு துணை பொதுச் செயலாளர் பதவி வழங்க வாய்ப்பு இருப்பதாக திமுக வட்டாரங்கள் தெரிகின்றன.

 

பொதுக்குழு கூட்டத்தில் பொதுச்செயலாளராக துரைமுருகன், பொருளாளராக டி.ஆர்.பாலு ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்படுகின்றனர்.

 

இந்தநிலையில் ஆ.ராசா மற்றும் பொன்முடி ஆகியோருக்காகவே இந்தப் புதிய விதிமுறைகளை திமுகவின் தலைமை மாற்றம் செய்தள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Exit mobile version