தமிழ்நாட்டில் விரைவில் மிதக்கும் உணவக கப்பல்

0
179
தமிழ்நாட்டில் விரைவில் மிதக்கும் உணவக கப்பல்

தமிழ்நாட்டில் விரைவில் மிதக்கும் உணவக கப்பல்

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முட்டுகாட்டில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் சார்பாக படகு இல்லம் உள்ளது. இங்கு மிதக்கும் படகுகள், எந்திர படகுகள் போன்ற படகுகள் பொதுமக்கள் சாகச  பயணம் மேற்கொள்வதற்காக இங்கு உள்ளது.

தற்போது சுற்றலா பயணிகளை கவரும் விதமாக தமிழ்நாட்டில் முதன்முறையாக மிதக்கும் உணவக கப்பல் ஒன்று நிறுவப்பட உள்ளது. இதற்கான கட்டுமான பணிகளை சுற்றலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.

இதில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையத்துறை அரசு முதன்மைச் செயலாளர் சந்திரமோகன், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத் தலைவர், சுற்றுலாத்துறை இயக்குனர் சந்தீப் நந்தூரி, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக நிர்வாக இயக்குனர் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகி ராகுல்நாத், திருப்போரூர் சட்டபேரவை உறப்பினர் எஸ்.எஸ். பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இது தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம், கிராண்ட்யூனர் மரைன் இன்டர்நேஷனல் நிறுவனம் மற்றும் பொதுபங்களிப்பு மூலமாக செயல்படுத்தப்பட உள்ளது. இந்த உணவக கப்பலின் மதிப்பீடு ரூ.5 கோடி ஆகும்.

இந்த கப்பல் 125அடி நீளமும், 25 அடி அகலமும் கொண்டதாக இருக்கும். இதில் சமையலறை, சேமிப்பு அறை, கழிவறை மற்றும் மோட்டார் இஞ்சின் அறை ஆகிவை அமைக்கப்பட உள்ளது.

இந்த மிதக்கும் கப்பல் உணவகத்தில் தரைதளம் முழுவதும் குளிருட்டப்பட்ட வசதியுடன் அமைக்கப்பட உள்ளது. முதல் தளம் திறந்தவெளி தளமாகவும், மேல் தளம் சுற்றுலா பயணிகள் பயணித்து கொண்டே உணவு உண்ணும் வகையில் அமைக்கப்படும்.

இந்த கப்பல் கட்டுமான பணிகள் ஒரு மாதத்தில் முடிவடைந்து விடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.