ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கு பெறும் காளைகளுக்கு கட்டுப்பாடு! உரிமையாளர்கள் கண்டிப்பாக இந்த சான்றிதழ்களை வைத்திருக்க வேண்டும்!

0
213
Restrictions on bulls participating in jallikattu competition! Owners must have these certificates!

ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கு பெறும் காளைகளுக்கு கட்டுப்பாடு! உரிமையாளர்கள் கண்டிப்பாக இந்த சான்றிதழ்களை வைத்திருக்க வேண்டும்!

தமிழர்களுக்கே உரிய பண்டிகையான பொங்கல் பண்டிகைக்கு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது வழக்கம்.எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலுமே அவர்கள் பொங்கல் பரிசு தொகுப்பை வழகுவார்கள்.அந்த வகையில் கடந்த ஆண்டு திமுக ஆட்சியானது 21 பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கபட்டது.ஆனால் அந்த பொருட்கள் அனைத்தும் தரமற்றதாக இருந்ததாக புகார் எழுந்தது.

அதனால் பொங்கல் பரிசு தொகுப்பு பற்றி சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.அதில் 1000 ரூபாய் ரொக்க பணம் வழங்க முடிவு செய்யப்பட்டது.அதனுடன் சர்க்கரை,பச்சரிசி வழங்க முடிவு செய்யப்பட்டது ஆனால்  அதனுடன் கரும்பு வழங்க வேண்டும் என் விவசாயிகள் தரப்பில்  கோரிக்கை எழுந்து வந்தது அந்த கோரிக்கை ஏற்று பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு வழங்க அரசு முடிவு செய்தது.

மேலும் தமிழர் திருநாளன்று பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் மதுரை அலங்காநல்லூர்,பாலமேடு போன்ற இடங்களில் ஜல்லிக்கட்டு நடைபெறும்.பொங்கல் பண்டிகைக்கு சில நாட்களே உள்ள நிலையில் ஜல்லிக்கட்டு போட்டிக்காக காளைகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றது.இந்நிலையில் மதுரையில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு தகுதிச் சான்று வழங்கும் பணி நடைபெற்று வருகின்றது.

ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கு பெறும்  காளைகளுக்கு தகுதி சான்றிதழை அரசு கால்நடை  மருத்துவர்களால் வழங்கப்பட்டு வருகின்றது.போட்டியில் பங்கு பெறும் மாடுகள் நாட்டு இன காளையாக இருக்க வேண்டும்.காளைக்கு மூன்று வயதுக்கு மேல் இருக்க வேண்டும் என பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.