திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய கட்டுப்பாடு.. இனி 1500 பேர் மட்டும் தான் அனுமதி!! அதிரடி உத்தரவு போட்ட தேவஸ்தானம்!!
திருப்பதி தேவஸ்தானமானது பக்தர்களின் தேவைக்கேற்ப விதிமுறைகளை அவ்வபோது மாற்றி வரையறுத்து வருகிறது. ஒரு நாளில் மட்டும் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க லட்சக்கணக்கான மக்கள் வருகின்றனர். குறிப்பாக விடுமுறை மற்றும் பிரசித்தி பெற்ற திரு நாட்களில் கூட்டத்தின் அளவை கட்டுப்படுத்த முடியாது.
அச்சமயத்தில் அதிகப்படியான ப்ரோட்டோகால் உள்ளிட்டவைகளை செயல்படுத்தி திருப்பதி தேவஸ்தானம் மக்களுக்கு சிறப்பான தரிசனம் கிடைக்க ஏற்பாடு செய்து வருகிறது. அதேபோல ஏழுமலையானை தரிசிக்க மூன்று மாதத்திற்கு முன்பே டிக்கெட்டை முன்பதிவு செய்து கொள்ளும் வசதியை செயல்படுத்தியும் உள்ளனர். அந்த வகையில் ஷிவாணி அறக்கட்டளை மூலம் ரூபாய் 10,500 என்ற கட்டணத்தில் ஏழுமலையானை நீண்ட நேரம் நின்று தரிசிக்கும் வகையில் டிக்கெட் வழங்கப்பட்டு வருகிறது. இதில் அதிகப்படியானோர் தரிசனம் செய்வதால் சாதாரண மற்ற பக்தர்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகிறது.
இதனை மாற்றியமைக்கும் விதத்தில் தேவஸ்தானம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இனி ஸ்ரீ வாணி அறக்கட்டளை மூலம் தினசரி 1500 டிக்கெட்டுகள் மட்டும் வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர். இதன் மூலம் சாதாரண பக்தர்கள் வெகு நேரம் காத்திருப்பது குறையும் என்பதால் இதனை நடைமுறைப்படுத்தியுள்ளதாக கூறியுள்ளனர்.