Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

 திட்டமிட்டப்படி நாளை மறுநாள் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ரிசல்ட்..தேர்வுத்துறை அறிவிப்பு!

Results for 11th class students the next day as planned .. Exam announcement!

திட்டமிட்டப்படி நாளை மறுநாள் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ரிசல்ட்..தேர்வுத்துறை அறிவிப்பு!

விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்த நிலையில் திட்டமிட்டபடி நாளை மறுநாள் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என தேர்வுத்துறை அறிவித்தார். தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு 2021- 22 ஆம் கல்வியாண்டிற்கான 10,11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கடந்த மே மாதம் சிறப்பாக நடந்து முடிந்தனர்.

சென்னையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2021-22-ம் கல்வியாண்டுக்கான 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மே மாதம் நடத்தப்பட்டது.8 லட்சத்துக்கு மேற்பட்ட மாணவ_மாணவிகள் தேர்வில் கலந்து கொண்டு சிறப்பாக தேர்வை எழுதினர்கள்.

இந்த பொதுத்தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) வெளியிடப்பட இருப்பதாக தேர்வுத் துறை அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்ககம் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 27-ந்தேதி (நாளை மறுநாள்) காலை 10 மணிக்கு www.tnresults.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையதளங்களில் மூலம் வெளியிடப்படும்.

இந்த இணையதளத்தின் மூலம் தங்களுடைய பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். பள்ளி மாணவ-மாணவிகளுக்கு செல்போன் எண்களின் மூலம் குறுஞ்செய்தி வாயிலாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்.

Exit mobile version