தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும் குழியடிச்சான் அரிசி!!! இதன் மற்ற நன்மைகள் என்னென்ன!!?

0
96
#image_title

தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும் குழியடிச்சான் அரிசி!!! இதன் மற்ற நன்மைகள் என்னென்ன!!?

பாரம்பரிய உணவு வகைகளை தயாரிப்பதில் குழியடிச்சான் அரிசி முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த குழியடிச்சான் அரிசியின் மூலம் நமக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

பாரம்பரிய முறையான பத்திய முறையில் முக்கியமான பங்கு வகிக்கின்றது இந்த குழியடிச்சான் அரிசி. குறியாக இருக்கும் நீரில் இந்த அரிசியின் நெற்கதிர்கள் வளரும். பின்னர் இது வெடித்து நமக்கு இந்த அரிசி கிடைப்பதால் இதை குழியடிச்சான் அரிசி என்று அழைக்கப்படுகிறது.

இந்த அரிசியை குழி வெடிச்சான் என்றும் அழைக்கப்படுவது. வறட்சியான காலத்திலும் வளரக்கூடிய தன்மை கொண்டது தான் இந்த குழியடிச்சான் அரிசி.

குழியடிச்சான் அரிசியில் நம் உடலுக்குத் தேவையான பல ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றது. இந்த குழியடிச்சான் அரிசியில் வைட்டமின் சத்துக்கள், தாது சத்துக்கள், நார்ச்சத்துக்கள், புரதச்சத்துக்கள் ஆகியவை உள்ளது.

குழியடிச்சான் அரிசியின் நன்மைகள்…

* குழியடிச்சான் அரிசியை குழந்தை பெற்ற தாய்மார்கள் உணவாக செய்து சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் நன்கு சுரக்கும்.

* நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள் அனைவரும் குழியடிச்சான் அரிசியில் உணவு தயாரித்து சாப்பிடலாம். இதன் மூலமாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்.

* குழியடிச்சான் அரிசி நமது குடலில் ஏற்படும் புற்றுநோய் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

* மலச்சிக்கல் பிரச்சனை இருப்பவர்கள் குழியடிச்சான் அரிசியை உணவாக சமைத்து சாப்பிடலாம். மலச்சிக்கல் பிரச்சனை தீரும்.

* குழியடிச்சான் அரிசியில் கால்சியம் சத்துக்கள் அதிகளவில் உள்ளது. இதனால் நம் எலும்புகள் வலிமை பெறும். பற்கள் தொடர்பான பிரச்சனைகள் சரியாகும்.

* உடல் எடை அதிகமாக இருப்பவர்கள் உடல் எடையை குறைக்க குழியடிச்சான் அரிசியை சாப்பிடும் பொழுது உடல் எடை குறையத் தொடங்கும்.

* நீரிழிவு நோயாளிகளும் குழியடிச்சான் அரிசியில் உணவு செய்து சாப்பிடலாம். இதனால் நீரிழிவு நோய் கட்டுப்படும்.

* ஹார்மோன் சார்ந்த பிரச்சனைகள் உள்ளவர்கள் அனைவரும் குழியடிச்சான் அரிசியில் உணவு தயாரித்து சாப்பிடலாம். இதன் மூலம் ஹார்மோன் சார்ந்த பிரச்சனைகள் சரியாகும்.

இந்த குழியடிச்சான் அரிசியை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம். இந்த குழியடிச்சான். அரிசியில் புட்டு, கஞ்சி, சாப்பாடு, இட்லி ஆகிய உணவுகளை செய்து சாப்பிடலாம்.