Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அரிசி கழுவிய நீர் போதும்!! முடி உதிர்ந்த இடத்தில் சீக்கிரம் பேபி ஹேர் வளர்ந்துவிடும்!!

இளம் பருவத்தில் முடி வளர்ச்சி அதிகமாக இருந்த காலம் மாறி தற்பொழுது முடி உதிர்வு பிரச்சனை அதிகரித்துள்ளது.ஹார்மோன் குறைபாடு,ஊட்டச்சத்து குறைபாடு,தலை முடி பராமரிப்பின்மை போன்ற காரணங்களால் அதிகளவு முடி கொட்டுகிறது.

தொடர்ந்து முடி உதிர்வு பிரச்சனையை சந்தித்து வருபவர்கள் தாமதிக்காமல் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஹேர் பேக்கை ட்ரை பண்ணுங்க.நிச்சயம் முடி உதிர்வு பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.

தேவையான பொருட்கள்:-

அரிசி கழுவிய தண்ணீர் – ஒரு கப்

வைட்டமின் ஈ மாத்திரை – ஒன்று

பயன்படுத்தும் முறை:-

1)முதலில் அரிசி ஊறவைத்த நீரை வடித்து சேகரித்துக் கொள்ளுங்கள்.இந்த நீரை இரண்டு நாட்கள் வரை மூடி போட்டு வையுங்கள்.

2)பிறகு அதில் ஒரு வைட்டமின் ஈ மாத்திரை போட்டு நன்கு கலக்குங்கள்.பிறகு இதை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி தலை முழுவதும் ஸ்ப்ரே செய்து ஜென்ட்டிலாக மசாஜ் செய்யுங்கள்.

3)ஒரு மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் ஷாம்பு பயன்படுத்தி தலையை அலசி சுத்தம் செய்யுங்கள்.இந்த அரிசி நீர் பேக் புதிய முடியை வளர்ச் செய்ய உதவிபுரிகிறது.

தேவையான பொருட்கள்:-

அரிசி ஊறவைத்த நீர் – ஒரு கப்

கற்றாழை ஜெல் – இரண்டு தேக்கரண்டி

பயன்படுத்தும் முறை:-

ஒரு கப்பில் அரிசி ஊறவைத்த நீர் ஊற்றிக் கொள்ளுங்கள்.பிறகு கற்றாழை மடலை தோல் நீக்கிவிட்டு ஜெல்லை பிரித்து அரிசி ஊறவைத்த நீரில் போட்டு நன்றாக கலந்து தலை முழுவதும் அப்ளை செய்யுங்கள்.

பிறகு மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலசி சுத்தம் செய்யுங்கள்.இவ்வாறு தொடர்ந்து தலையை பராமரித்து வந்தால் புதிதாக முடி வளரத் தொடங்கும்.

தேவையான பொருட்கள்:-

அரிசி ஊறவைத்த நீர் – ஒரு கப்

ஆளி விதை – ஒரு தேக்கரண்டி

பயன்படுத்தும் முறை:-

ஒரு கப்பில் அரிசி ஊறவைத்த நீரை சேகரித்து வையுங்கள்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி ஆளிவிதை சேர்த்து நாள் முழுவதும் ஊறவையுங்கள்.இப்படி செய்தால் ஜெல் போன்று கிடைக்கும்,

இதை ஸ்கால்ப்பில் அப்ளை செய்து சிறிது நேரம் மசாஜ் செய்யுங்கள்.பிறகு மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலையை அலசி சுத்தம் செய்யுங்கள்.இப்படி தொடர்ந்து செய்து வந்தால் தலைமுடி அடர்த்தியாகவும் பளபளப்பாகவும் வளரும்.

Exit mobile version