Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

102 லிருந்து 140 ஆக உயர்வு! ஓர் வருடத்தில் 38 கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை உயர்வா!

Rise from 102 to 140! Increase the number of 38 millionaires in a year!

Rise from 102 to 140! Increase the number of 38 millionaires in a year!

102 லிருந்து 140 ஆக உயர்வு! ஓர் வருடத்தில் 38 கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை உயர்வா!

மக்கள் கொரோனா காலத்தில் உயிர் தப்பிப்பதே பெரும் விஷயமாக இருந்தது.அந்தநிலையில் கூட கோடிஸ்வரர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.அந்தவகையில் 2021 ஆம் ஆண்டிற்கான கோடிஸ்வரர்களின் பட்டியலை போர்ப்ஸ் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ளது.கடந்த ஆண்டு 102ல் இருந்த மொத்த இந்தியர்களின் கோடிஸ்வரர்களின் எண்ணிக்கை தற்போது  ஓராண்டிலேயே 140 ஆக உயர்ந்துள்ளது.அவர்களின் மொத்த சொத்து மதிப்பு 596 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது என்று போர்ப்ஸ் தெரிவித்துள்ளது.

இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள 5 கோடிஸ்வரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளனர்:

சுமார் 6 லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளுடன் ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி முதலிடத்தில் உள்ளார்.

சுமார் 6 லட்சத்து 70 ஆயிரம் கோடி மதிப்பிலான அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி இரண்டாம் இடத்தில் உள்ளார்.அதானி கிரீன்,அதானி என்டர்பிரைசஸ் ஆகிய அவரது நிறுவனங்கள் மின்னல் வேகத்தில் உயர்ந்ததால் அதானியின் சொத்து மதிப்பும் உயர்ந்துள்ளது.

HCL நிறுவனர் ஷிவ் நாடார் ஒரு லட்சத்து 72 ஆயிரன் கோடி ரூபாயுடன் 3 ஆம்  இடத்தில் உள்ளார்.அவருக்கு அடுத்து அவன்யூ சூப்பர் மார்க்கெட் தலைவர் ராதாகிருஷ்ணன் தமானி 1 லட்சத்து 20 ஆயிரம் கோடி மதிப்புடன் நான்காம் இடத்தை பெற்றுள்ளார்.கோடக் மஹிந்திரா வங்கி தலைவர் உதய் கோடக் ஒரு லட்சத்து 16ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புடன் 5 ஆம் இடத்தில் இருக்கிறார்.இவர்களை தொடர்ந்து லட்சுமி மிட்டல், குமார் பிர்லா,சைரஸ் பூனவல்லா,திலீப் ஷாங்க்வி,சுனில் மிட்டல் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

முதல் பத்து இந்தியர்களின் கோடிஸ்வரர்கள் பட்டியலில் இரண்டு இந்தியர்களின் சுகாதரத்துறையில் முதலீடு செய்ததால் சொத்தின் மதிப்பு உயர்ந்துள்ளது.சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் சைரஸ் பூனவல்லா மற்றும் சன் பார்மா சூட்டிகல் இண்டஸ்ட்ரீஸ் திலீப் ஷாங்வி ஆகியோர் ஆவர்.கடந்த ஆண்டு போர்ப்ஸ் வெளியிட்ட அறிவிப்பில் 12 இடத்தில் இருந்த பர்மா தொழிலதிபர் திலீப் ஷாங்வி இந்த ஆண்டு முதல் 10 இடங்களுக்குள் வந்தார்.

Exit mobile version