Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வலி தாங்காமல் கதறிய ரிஷப்! காயங்கள் குறித்து டாக்டர் சொன்ன தகவல்!

வலி தாங்காமல் கதறிய ரிஷப்! காயங்கள் குறித்து டாக்டர் சொன்ன தகவல்!

இந்திய கிரிக்கெட் அணியின் வீரரான ரிஷப் பண்ட் நேற்று அதிகாலை டெல்லியில் இருந்து தனது சொந்த ஊரான உத்தரகாண்ட் மாநிலம் ரூர்கிக்கு சொகுசு கார் ஒன்றில் தானே ஓட்டி சென்றார். நேற்று அதிகாலை 5:30 மணி அளவில் டெல்லி- டேராடூன் நெடுஞ்சாலையில் ஹம்மத்பூர் ஜல் என்ற இடத்தின் அருகே ரூர்கியின் நர்சன் எல்லைப் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த கார் அங்குள்ள தடுப்பு சுவரை மோதி விபத்துக்குள்ளானது.

விபத்துக்குள்ளான ரிஷப்பை அந்த வழியாக சென்ற அரியானா போக்குவரத்து கழகத்தின் பானிபட் டெப்போவுக்கு உட்பட்ட பஸ் ஓட்டுனர் சுசில்குமார் மற்றும் நடத்துனர் பரம்ஜித் ஆகியோர் காப்பாற்றினர். ரிஷப் பண்டிற்கு தலை முதுகு மற்றும் காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இருவரும் ரிஷப் பண்டை காரில் இருந்து பத்திரமாக மீட்டதும் 108 ஆம்புலன்ஸ் இருக்கு போன் செய்துள்ளனர். ஆம்புலன்ஸில் மருந்தாளுநர் மோனு குமார் கூறுகையில் ரிஷபிற்கு கண் மூக்கு பகுதியில் பாதிப்பு ஏற்பட்டு ரத்தம் வழிந்தோடியது.

அப்போது ரிஷப் மோனுவிடம் வலி அதிகமாக இருக்கிறது வலி நிவாரணத்திற்கான ஊசியை போடுங்கள் என்று கேட்டுள்ளார். அதன்பின் ஆம்புலன்ஸ் உதவியாளரிடம் அனுமதி பெற்று மோனு வலி நிவாரண ஊசியை போட்டுள்ளார். பிறகு டேராடூன் மேக்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. தலைக்காயங்களுக்கு கட்டும் போடப்பட்டுள்ளது. மேலும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைக்காக டெல்லி கொண்டு செல்லப்படலாம். அவரது உடல்நிலை எலும்பியல் துறையின் டாக்டர் கௌரவ் குப்தாவால் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது.

மேலும் உயிர்க்கு ஆபத்தான காயங்கள் எதுவும் ஏற்படாமல் ரிஷப் நன்றாக இருக்கிறார். இதனை அடுத்து விளையாட்டு காயங்கள் பிரிவை கவனித்து வரும் எய்ம்ஸ்- ரிஷிகேஷ் டாக்டர் கமர் ஆசம் கூறுகையில் ரிஷப் தசை நார் காயத்திலிருந்து குணமாக மூன்று முதல் ஆறு மாதங்கள் ஆகலாம். காயங்கள் கடுமையானதாக இருந்தால் இன்னும் அதிக காலம் எடுக்கலாம். மேலும் விரிவான மதிப்பீடு அவரின் காயங்களின் தன்மையை அடிப்படையாகக் கொண்டது எனக் கூறினார்.

Exit mobile version