Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ரிஷிபம் ராசி – இன்றைய ராசிபலன் !! சற்று  அமைதி தேவைப்படும் நாள்!!

Taurus – Today's Horoscope!! A day to act in peace!

Taurus – Today's Horoscope!! A day to act in peace!

ரிஷிபம் ராசி – இன்றைய ராசிபலன் !! சற்று  அமைதி தேவைப்படும் நாள்!!

ரிஷப ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான்.

இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு அமைதியாக செயல்பட வேண்டிய நாள். இன்று உங்கள் ராசியில் சந்திராஷ்டமம் தொடரதால் கவனமாக இருப்பது நல்லது.

கணவன் மனைவியுடைய சிறு சிறு பிரச்சனைகள் இருப்பதால் அனுசரித்து செல்வது நல்லது. வருமானம் வந்து சேர்வதில் காலதாமதம் ஆகலாம். உத்தியோகத்தில் வேலை பளு அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரம் தொடர்பாக இன்னல்கள் இடையூறுகள் வரலாம் என்பதால் கூடுமானவரை வாடிக்கையாளர்களையும் கூட்டாளிகளையும் அனுசரிச்சு செல்வது அவசியம்.

அரசியலில் இருக்கும் அன்பர்கள் அமைதியாக செயல்பட வேண்டும். கலைத்துறையை சேர்ந்த அன்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேர்வதில் காலதாமதம் ஆகலாம்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு வீண் அலைச்சல் வந்து சேரும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் மந்தமான சூழ்நிலை உருவாகலாம். மூத்த வயதில் உள்ள அன்பர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. வெளிநாட்டில் வசிக்கும் அன்பர்கள் எந்த ஒரு விஷயத்திலும் சற்று தடை தாமதத்தை காண்பார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான வெண்மை நிற ஆடை அணிந்து ஸ்ரீ சரஸ்வதி தேவியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Exit mobile version