நாட்டில் நோய் தொற்று தற்போது கட்டுப்பாட்டிற்குள் வந்திருந்தாலும் கடந்த சில தினங்களாக தலைநகர் டெல்லியில் நோய் தொற்று பாதிப்பு காரணமாக, பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவதாக தெரிகிறது. இந்த நோய் தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதை தொடர்ந்து டெல்லி அரசு கட்டுப்பாடுகளை தீவிரப் படுத்துவது தொடர்பாக யோசித்து வந்ததாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது இந்த நிலையில், டெல்லி அரசு பொது இடங்களில் முகக்கவசம் அணிவதை தற்போது கட்டாயம் என தெரிவித்திருக்கிறது.
நாட்டில் கடந்த2 வருட காலமாக நோய் தொற்று பரவல் அதிகரித்து வந்தது இந்த நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில, அரசுகள் தீவிரமாக முயற்சிகளை மேற்கொண்டனர்.
தடுப்பூசி செலுத்துதல் சமூக இடை விலையை பின்பற்றுதல், மகக்கவசம் அணிதல், போன்ற நடைமுறைகளை மத்திய, மாநில, அரசுகள் தீவிரப்படுத்தின இதனை தொடர்ந்து நோய் தொற்று பரவல் மெல்ல, மெல்ல, குறைய தொடங்கியது.
இந்த நிலையில், தற்போது தலைநகர் டெல்லியில் மீண்டும் நோய் தொற்று பரவல் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு பொது இடங்களில் மகக்கவசம் அணிவதை பொதுமக்கள் கடை பிடிக்காததையடுத்து டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் இந்த முடிவை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
அதோடு பொது இடங்களில் மகக்கவசம் அணியாமல் இருந்தால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் டெல்லி அரசின் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.