கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் விமான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு விமான நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன.
செலவை குறைக்கும் விதமாக ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் நடவடிக்கைகளில் பல விமான நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. ஆனாலும், பல மாதங்களாக விமான போக்குவரத்து நடைபெறாததால் பல்வேறு நாடுகளை சேர்ந்த விமான நிறுவனங்கள் திவாலாகி வருகின்றன.
அமெரிக்க அரசு நிர்வாகம் நிதி உதவி வழங்காததால் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 19 ஆயிரம் விமான ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாக அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. அரசு நிதி வழங்கும் பட்சத்தில் இந்த வேலை இழப்பு தவிர்க்கப்படலாம் இல்லையேல் 19 ஆயிரம் ஊழியர்கள் பணி நீக்க முடிவில் மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 19 ஆயிரம் பேர் வேலைஇழக்கலாம் என்ற சூழல் ஏற்பட்டுள்ளதால் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமான ஊழியர்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.