மற்ற ஓடிடி தளங்களின் கதை முடிவுக்கு வரும் அபாயம்! ஜியோ சினிமா ஓடிடி தளத்தின் அதிவேக வளர்ச்சி!!

0
188
#image_title

மற்ற ஓடிடி தளங்களின் கதை முடிவுக்கு வரும் அபாயம்! ஜியோ சினிமா ஓடிடி தளத்தின் அதிவேக வளர்ச்சி!

 

முகேஷ் அம்பானி அவர்களின் ஓடிடி தளமான ஜியோ சினிமாவின் அதிவேக வளர்ச்சியானது மற்ற ஓடிடி தளங்களான ஹாட்ஸ்டார், அமேசான், நெட்பிளிக்ஸ் போன்ற ஓடிடி தளங்களை முடிவுக்கு கொண்டு வரும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 

முகேஷ் அம்பானியின் ஜியோ சினிமா ஓடிடி தளம் அதன் பிரீமியம் உள்ளடக்கத்திற்கான சந்தா திட்டங்களை வெளியிட்டது. ஆண்டுக்கு 999 ரூபாய் செலுத்தினால் ஜியோ சினிமா ஓடிடி தளங்களின் அனைத்து வெப் சீர்ஸ், படங்கள் மற்ற நிகழ்ச்சிகள் அனைத்தையும் பார்த்துக் கொள்ளலாம். 

 

ஜியோ சினிமாவில் உள்ள படங்களின் எண்ணிக்கையை மேம்படுத்தவும், ஓடிடி சந்தையில் அதன் மேலாக்கத்தை நிலைநாட்டவும் முகேஷ் அம்பானியின் இநத அறிவிப்பு அடுத்த படியாக பார்க்கப்படுகின்றது. 

 

முகேஷ் அம்பானி அவர்களின் மகன் ஆகாஷ் அம்பானியின் தலைமையிலான ஜியோ சினிமாவில் வாரனர் பிரதர்ஸ் மற்றும் ஹெச்பிஓ(HBO) ஆகியவற்றின் பிரத்யேக நிகழ்ச்சிகள் சேர்க்கப்பட்டுள்ளது. ஜியோ சினிமாவின் சந்தாதாரர்கள் தற்போது HBOவின் பிரத்யேக நிகழ்ச்சிகளான ‘தி லாஸ்ட் ஆப் அஸ்’, ‘ஹவுஸ் ஆப் தி டிராகன்’, ‘சக்சிஸ்சன்’ (Succession) ஆகிய நிகழ்ச்சிகளை பார்க்கும் வாய்ப்பை பெற்றுள்ளனர். 

 

முன்பு கூறியது போல ஜியோ சினிமாவில் சந்தாதாரராக இணைவதற்கு ஆண்டுக்கு 999 ரூபாய் செலுத்தினால் போதும். இந்த சந்தா தொகை அதன் மற்ற போட்டி ஓடிடி நிறுவனங்களான அமேசான், நெட்பிளிக்ஸ், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஆகிய ஓடிடி நிறுவனங்களின் சந்தா தொகையை விட குறைவாக இருக்கிறது. 

 

நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனம் தற்போது ஆண்டு சந்தா திட்டத்தை வழங்குவது இல்லை. அதற்கு மாறாக 149 ரூபாய் முதல் 649 ரூபாய் வரையிலான திட்டங்கள் உள்ளது. அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தின் ஆண்டு சந்தா மதிப்பு தற்போது 1499 ரூபாயாக உள்ளது. டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தின் ஆண்டு சந்தாவும் 1499 ரூபாயாக உள்ளது. ஜியோ சினிமாவின் பிரீமியம் சந்தா ஒரே நேரத்தில் நான்கு சாதனங்களின் உள்ளடக்கத்தை ஸ்ட்ரீம் செய்யும் அம்சங்களை கொண்டதாக உள்ளது.

 

இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரை இலவசமாக பார்ப்பதற்கு ஜியோ சினிமா ஏற்பாடு செய்து கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஜியோ சினிமா செயலி மூலம் ஐபிஎல் தொடரை இலவசமாக ஸ்ட்ரீம் செய்தது. இதன் மூலம் ஜியோ சினிமா ஓடிடி தளம் முன்னணி ஓடிடி தளமாக முன்னேறியது. வாரனர் பிரதர்ஸ் மற்றும் ஹெச்பிஓவின் நிகழ்ச்சிகளை சேர்க்க  ஜியோ சினிமா எடுத்த முடிவு இன்னும் அதிக ரசிகர்களை ஜியோ சினிமா பக்கம் ஈர்க்கும். 

 

புதிய தொடர்களை ஸ்ட்ரீம் செய்யும் போர்கள் வரவிருக்கும் மாதங்களில் இருந்து தொடங்கவுள்ளது. ஜியோ சினிமாவின் சவால்களை மற்ற ஓடிடி தளங்களான அமேசான், நெட்பிளிக்ஸ், ஹாட்ஸ்டார் போன்ற நிறுவனங்கள் எவ்வாறு எதிர்கொள்கின்றது பார்க்கலாம். ஜியோ சினிமாவில் வந்திருக்கும் புதிய வெப் தொடர்கள் மூலமாக ஓடிடி உலகம் பெருமளவு போட்டியை சந்திக்கவுள்ளது. 

 

ரன்தீப் ஹூடா, நானா படகேர், கே.கே. மேனன் மற்றும் பிரபல நடிகர்கள் ஜியோ சினிமாவில் இந்த புதிய வெப் தொடர்கள் மூலம் தங்களது டிஜிட்டல் இன்னிங்ஸை தொடங்கவுள்ளனர்.