எதிர்க்கட்சிகளை சமாளிக்க ஆர் கே நகரில் அதிரடி வியூகம் வகுத்த அதிமுக தலைமை!

0
117

எதிர் வரும் சட்டசபை தேர்தலில் அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் மற்றும் அதற்கான வேட்பாளர்கள் யார் யார் என்ற மாதிரி பட்டியல் வெளியாகி பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது. அதில் பாரதிய ஜனதா கட்சிக்கு இருபது பாட்டாளி மக்கள் கட்சிக்கு 21 தொகுதிகளில் தேமுதிகவிற்கு 14 தொகுதிகளிலும் தமாகவிற்கு ஐந்து தொகுதிகளும் மற்ற கட்சிகளுக்கு மூன்று தொகுதிகளும் ஒதுக்கப்பட இருக்கிறது என்று தெரியவருகிறது மீதம் இருக்கின்ற 171 தொகுதிகளிலும் அதிமுக நேரடியாக கலந்து கொள்ள இருப்பதாக திட்டமிடப்பட்டிருக்கிறது.

அதிலும் கடந்த தேர்தலின் போது அதிமுக வெற்றி பெற்ற தொகுதிகள் மற்றும் திமுக வேட்பாளர்கள் உடன் நேரடியாக மோதுவதற்கு அதிமுக திட்டமிட்டு இருக்கிறது. அதிமுகவை சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளை தவிர்த்துவிட்டு ஆளும் தரப்பில் இருக்கக்கூடிய நட்சத்திர அந்தஸ்து உள்ளவர்களுக்கு தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு கொடுப்பதற்கு முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இதில் நடிகை விந்தியா அவர்களுக்கு ஆர் கே நகரில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு கொடுக்க அந்த கட்சியின் தலைமை திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.

ஜெயலலிதா மீது கொண்ட ஈர்ப்பின் காரணமாக, அதிமுகவில் இணைந்தவர் நடிகை விந்தியா ஜெயலலிதாதான் தன்னுடைய முன்மாதிரி என்று அப்போது தெரிவிப்பவர் அவருடைய பேச்சு பிரச்சாரம் என்று எதை எடுத்தாலும் ஆரம்பத்தில் சற்று தடுமாறித்தான் தமிழில் உரையாற்றுவார். ஆனாலும்கூட விந்தியா பேச்சை அதிமுகவின் தொண்டர்கள் ரசிக்கத்தான் செய்தார்கள். ஜெயலலிதா உயிரிழந்த பிறகு எத்தனையோ நபர்கள் கட்சியில் இருந்து விலகி போய் இருந்தாலும் இவர் எப்பொழுதும் அதிமுக பக்கம் இருந்திருக்கிறார்.

பிரச்சாரம் என்று எப்போது தெரிவித்தாலும் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு சென்று அவருடைய ஆசியை வாங்கிக் கொண்டு களத்தில் இறங்குவது இவருடைய வழக்கமாக இருக்கிறது. அண்மையில் தான் அதிமுகவில் நட்சத்திரப் பேச்சாளர் என்ற பொறுப்பிலிருந்து கொள்கை பரப்பு துணைச் செயலாளர் என்று பதவி உயர்வு பெற்றார். அதன்படி எதிர்வரும் தேர்தலில் திமுக மற்றும் தினகரனை சமாளிப்பதற்காக ஆர் கே நகர் தொகுதியில் நடிகையின் இந்தியாவை நிற்கவைக்க அதிமுக திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.