Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மனித உயிரா.. மட்கும் பொருளா.? வாகனத்தோடு குப்பைபோல் கொண்டு செல்லப்படும் இளைஞர் உடல்!

சாலை விபத்தில் உயிரிழந்த இளைஞர் ஒருவரின் உடல் மீது இருசக்கர வாகனத்தை போட்டு கொண்டு சென்ற காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகாரில் நடந்த சாலை விபத்து ஒன்றில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். பொதுவாக வாகன விபத்துகளில் இறந்தால் அவர்களது உடலை ஆம்புலன்ஸ் மூலம் போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவது வழக்கம். ஆனால் இதற்கு மாறாக பீகாரில் பெகுசராய் பகுதியில் இறந்த இளைஞரின் உடலை கொண்டு சென்ற விதம் காண்போரை கோபமடையச் செய்துள்ளது.

விபத்தில் இறந்த இளைஞரை ஒரு வேனில் ஏற்றி அவரது உடலின் மேல் இருசக்கர வாகனம் ஒன்றை போடப்பட்டுள்ளது. இந்த காட்சி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. மனித உயிரா மட்கும் பொருளா என்பதுபோல் மனிதநேயமில்லாமல் நடந்த இச்சம்பவம் குறித்து பலர் வேதனை தெரிவிக்கின்றனர். இந்தியாவில் மது மற்றும் சாலை விபத்துகளால் அதிக உயிரிழப்பு ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version