விருத்தாச்சலம் அருகே பள்ளி மாணவனை தாக்கியவர்களை கைது செய்ய கோரி சாலை மறியல்!!
இளைஞர்கள் உருட்டு கட்டையுடன் எதிரியை தாக்க, சென்றதால் பரபரப்பு.
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகேயுள்ள சத்தியவாடி கிராமத்தில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு, கோவில் திருவிழாவில் அதே பகுதி-யை இளைஞர்களுக்கும், பேரலையூர் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது இதனை இரு கிராம முக்கியஸ்தர்கள் அழைத்து சமாதானம் செய்து அனுப்பி வைத்த கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று சத்தியவாடி கிராமத்தைச் சேர்ந்த சத்தியமூர்த்தி மகன் தமிழ் செல்வன் என்ற பத்தாம் வகுப்பு மாணவன், கருவேப்பிலங்குறிச்சி உள்ள அரசு பள்ளிக்கு பொதுத்தேர்வு எழுத சென்றுள்ளான்.
அம்மாணவனை பேரளையூர், நேமம், சித்தலூர் உள்ளிட்ட கிராமத்தை சேர்ந்த சக பள்ளி மாணவர்கள், முன் விரோதத்தை மனதில் வைத்துக்கொண்டு, பள்ளிக்குள்ளேயே கடுமையாக தாக்கியுள்ளனர்.
இச்சம்பவத்தை மாணவன் சத்தியவாடி கிராமத்தில் உள்ள தனது உறவினர்களிடம் தகவல் தெரிவித்ததால், ஆத்திரம் அடைந்த பள்ளி மாணவனின் உறவினர்கள், கருவேப்பிலங்குறிச்சி பேருந்து நிறுத்தத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு வந்த போலீசார் சமாதானம் செய்து கொண்டிருக்கும் போது, சத்தியவாடி கிராமத்தை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட இளைஞர்கள், பள்ளி மாணவனை தாக்கிய, பேரலையூர் கிராமத்தை சேர்ந்த மாணவனை தாக்குவதற்காக, கீழே கிடந்த உருட்டு கட்டுகளை எடுத்துக்கொண்டு, கூட்டம் கூட்டமாக அக்கிராமத்தை நோக்கி நடந்து சென்றதால், ஒரு பதட்டமான சூழல் நிலவியது.
இதனைப் பார்த்த பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அலறி அடித்துக் கொண்டு ஓடினர்.
இதை அறிந்த காவல்துறையினர் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர் .
இந்த சாலை மறியலால் விருத்தாச்சலம், ஜெயங்கொண்டம், திருச்சி செல்லும் சாலைகள் அனைத்தும், ஒரு மணி நேரம் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை சாலையின் இரு புறங்களிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
மேலும் கூட்டம் கூட்டமாக, இளைஞர்கள் எதிரிகளை தாக்குவதற்காக உருட்டுக்கட்டையுடன் சென்ற சம்பவத்தால், அப்பகுதியில் பெரும் பரபரப்பும், பதட்டமும் நிலவியது.
பின்னர் காவல் துறையினர் சம்பந்தப்பட்ட நபர்களை, கைது செய்வதாக உறுதி அளித்ததன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.