Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சாலையோரம் நின்றிருந்த மணமக்களை நெகிழ வைத்த முதல்வரின் அந்த செயல்!

காரிலேயே சென்று கொண்டிருந்தாலும் சாலையோரம் நினைப்பவர்களுடைய மனதின் எண்ணத்தையும் தெரிந்துகொண்டு சிறிதும் தயக்கம் காட்டாமல் காரை விட்டு இறங்கி அவர்களிடம் உரையாடி நெகிழ வைக்கின்றார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

தூத்துக்குடியில் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற ஒரு நிகழ்வை முடித்துக்கொண்டு காரில் சென்னை திரும்பிய போது சாலையோரம் கையில் மனுவுடன் நின்றுகொண்டிருந்த ஒரு மாற்றுத்திறனாளி பெண்ணை கண்டவுடன் தன்னுடைய காரை நிறுத்தச் சொன்ன முதல்வர் அந்தப்பெண்ணின் அருகில் சென்று அவருடன் உரையாடி அவர் அளித்த மனுவை பெற்றுக்கொண்டார் அந்த மனுவை பெற்றுக்கொண்ட இரண்டு மணி நேரத்தில் அந்த மனுவில் இருந்த கோரிக்கையையும் நிறைவேற்றி அவருக்கு அரசு மருத்துவமனையில் வேலை போட்டு கொடுத்தார் தமிழக முதல்வர். முதல்வன் பட பாணியில் முதல்வர் என மக்கள் அந்த செயலை பாராட்டி இருக்கிறார்கள்.

இந்த நிலையில் கடலூர் பயணத்தின்போது சாலை ஓரமாக நின்று கொண்டிருந்த மணமக்களை காரை விட்டு இறங்கி சென்று வாழ்த்தி விட்டு சென்றிருக்கின்றார் தமிழக முதல்வர்.

நிவர் புயல் காரணமாக அதிகமான பாதிப்புக்கு உள்ளான கடலூர் மாவட்டத்தை பார்வையிடுவதற்காக நேற்று முன்தினம் தன்னுடைய காரில் புறப்பட்டு சென்றார் தமிழக முதல்வர் அப்போது வழியில் சாலையோரமாக ஒரு மரங்கள் என்று தனக்கு வணக்கம் செலுத்துவதை கண்ட உடனேயே முதல்வர் காரை நிறுத்தச் சொன்னதும் காரின் அருகே சென்று ஆசி வாங்குவதற்காக மணமக்கள் ஓடினார்கள் அவர்களுடனேயே அவர்களின் உறவினர்களும் ஓடினார்கள் ஆனால் அவர்கள் சிறிதும் எதிர்பாராத வகையிலே முதல்வர் காரை விட்டு இறங்கி மணமக்கள் அருகே போனாலும் மணமக்களும் உறவினர்களும் அளவில்லாத மகிழ்ச்சிக்கு உள்ளானார்கள்.

முதலமைச்சர் தங்கள் அருகில் வந்ததும் ஆசி வாங்குவதற்காக அவருடைய காலில் விழுந்தார்கள் மணமக்கள் அப்போது முதல்வர் கால் செருப்பை கழட்டி விட்டு மணமக்களுக்கு ஆசீர்வாதம் வழங்கியதை பார்த்து உறவினர்களும் மற்றும் ஊர் பொதுமக்களும் நெகிழ்ந்து போயினர்.

இந்த நிகழ்வை அந்தப் பகுதி மக்கள் கைப்பேசியில் படம் பிடித்து சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்து இருக்கிறார்கள் அந்த காணொளி இப்போது வைரலாகி பலரையும் நெகிழ வைத்து வருகின்றது.

Exit mobile version