Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கரூர் மாவட்டத்தில் வீட்டில் புகுந்த கொள்ளையர்கள்! போலீசார் விசாரணை!

Robbers entered the house in Karur district! Police investigation!

Robbers entered the house in Karur district! Police investigation!

கரூர் மாவட்டத்தில் வீட்டில் புகுந்த கொள்ளையர்கள்! போலீசார் விசாரணை!

கரூர் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் உள்ள சந்திரமோகன். இவர் சுக்காலியூர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். மேலும் இவர் கடந்த சில நாட்களுக்கு முன் குடும்பத்துடன் வெளியூர் சென்றுள்ளார். நேற்று  முன்தினம் இவர் குடும்பத்துடன் வெளியூரில் இருந்து வீடு திரும்பி உள்ளார். மேலும்  அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது.

அதனைக் கண்டு சந்திரமோகன் அதிர்ச்சி அடைந்து வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் வைத்திருந்த பொருட்கள் ஆங்காங்கே சிதறி  கிடந்ததை கண்டார். மேலும் இந்த சம்பவம் குறித்து சந்திரமோகன், கரூர் மாநகர போலீசாரிடம் புகார் அளித்தார் அந்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கரூர் மாநகர போலீசாரால் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். மேலும் அவர்கள் இந்த வீட்டில் பதிவான கைரேகைகளை  சேகரித்தனர் மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து பொருட்களை  திருடி சென்ற மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர். திருட்டு சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Exit mobile version