Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வழிப்பறி கும்பல்; இளம் பெண் உட்பட 4 பேர் கைது!

திருவள்ளூரில் பல்வேறு இடங்களில் வழிப்பறி செய்து வந்த இளம்பெண் உள்பட 4 பேர் போலீசார் நடத்திய சோதனையில் அவர்கள் பல்வேறு இடங்களில் வழிப்பறி செய்து வந்தது தெரிய வந்தது.

திருவள்ளூர் வேப்பம்பட்டு சோதனைச் சாவடியில் நேற்று முன்தினம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது 3 இருசக்கர வாகனத்தில் வந்த இளம் பெண் உட்பட 5 பேரை காவல் துறையினர் விசாரணை செய்தனர்.அதில் ஒருவர் தப்பி விட்ட நிலையில் 4 பேரிடம் விசாணை நடைப்பெற்றது.அவர்கள் விசாரணையில் கூறிய பதில்கள் சந்தேகப்படும்படி இருந்ததால் போலீசார் அவர்களை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் இவர்கள் வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.இவர்கள் வேப்பம்பட்டு பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே ஹரிதாஸ் என்பவரின் வண்டியை வழிமறித்து அவரிடம் ஒரு சவரன் மோதிரம்,செல்போன்,18,000 ரூபாய் பணம் மற்றும் ஏ.டி.எம். கார்டை பறித்தது தெரிய வந்தது.

இவர்கள் ஊத்தங்கரையைச் சேர்ந்த பூவரசன் என்பவரிடம் செல்போன் மற்றும் 2,500 பணத்தையும் பரிதுள்ளனர் என்பது விசாரணையில் தெரிய வந்தது.மேலும் போளிவாக்கம் கிராமத்தில் உள்ள பாக்குமட்டை தயாரிக்கும் நிறுவனத்தின் பூட்டை திறந்து 8,500 ரூபாய் பணம் மற்றும் இரண்டு பைக்குகளை கொள்ளையடிதுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version