Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மக்களே உஷார்: தோஷம் விலக சிறப்பு பூஜை என்று கூறி கொள்ளை! வெளியே சொன்னால் செய்வினை செய்து விடுவேன் என மிரட்டல்!

மக்களே உஷார்: தோஷம் விலக சிறப்பு பூஜை என்று கூறி கொள்ளை! வெளியே சொன்னால் செய்வினை செய்து விடுவேன் என மிரட்டல்!

சேலம் சூரமங்கலம் அருகே வீட்டில் தோஷம் கழிக்கிறேன் என்று சிறப்பு பூஜை செய்வதாக கூறி 25 சவரன் நகை கொள்ளையடித்த மந்திரவாதியை காவல்துறையினர் கையும் களவுமாக கைது செய்தனர்.

சேலம் சூரமங்கலம் கபிலர் தெருவை சேர்ந்தவர் மெகதாஜ் பேகம்.அவர் வீட்டில் தோஷம் இருப்பதாகவும் அதை விலக்க வேண்டுமென்றால் ஒரு சிறப்பு பூஜை நடத்த வேண்டும் என்றும் பிரபு என்ற மந்திரவாதி பேகம் இடம் கூறியுள்ளார்.இதனை நம்பிய அந்த 55 வயது மதிக்கத்தக்க பெண் அவரது வீட்டில் சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு செய்தார். அப்பொழுது பூஜையின்போது, பூஜைக்கு தேவையான சில பொருட்களை வாங்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.மேலும் பூஜைக்கு தேவையான பொருட்களை கூறி அந்த பொருட்களை வாங்கி வருமாறு அந்த பெண்ணை மந்திரவாதி அனுப்பி வைத்துள்ளார்.

அவர் பூஜை பொருட்களை வாங்கி வருவதற்கு முன்பே வீட்டில் இருந்த 25 சவரன் நகையை அந்த மந்திரவாதி கொள்ளையடித்து சென்று உள்ளார்.நகைகள் காணாமல் போனதை அறிந்த பேகம் அவர்கள் மந்திரவாதி தான் நகைகளை எடுத்திருக்க வேண்டும் என்று சந்தேகப்பட்டு அவரிடம் நகைகளை திருப்பி கொடுத்து விடுமாறு கேட்டு உள்ளார்.அதற்கு அந்த மந்திரவாதி நகையை நான் எடுக்கவில்லை என்றும், தொடர்ந்து என்னை தொந்தரவு செய்தால் செய்வினை வைத்து விடுவேன் என்றும்,ரத்தம் கக்கி தான் சாவாய் என்றும் அவர் மிரட்டியுள்ளார்.

ஆனால் அந்த மந்திரவாதியின் மிரட்டலுக்கு பயப்படாத அந்த பெண் காவல் நிலையத்தில் இவரை குறித்து புகார் அளித்தார். பேகம் அளித்த புகாரின் பெயரில் காவல்துறை நடத்திய விசாரணையில் நகையை திருடியது பிரபுதான் என்றும் ஒப்புக்கொண்டார். மேலும் அவர் திருடிய 25 சவரன் நகையை விற்று நிலம் மற்றும் இருசக்கர வாகனம் வாங்கியதும் தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து கொள்ளையடித்த நகையை விற்று அந்த பணத்தில் வாங்கிய டூவீலர் மற்றும் நிலப்பத்திரம்,மற்றும் மீதமிருந்த 40 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.இதுமட்டுமின்றி பேகம் போன்ற,பல்வேறு மக்களை சிறப்பு பூஜை என்ற பெயரில் மோசடி செய்திருப்பதும் தெரிய வந்தது.போலீசார் அந்த மந்திரவாதியை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version