Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மின்சார ரயிலில் அரங்கேறிய கொள்ளை சம்பவம் – பிடிபட்ட 2 பேரை கைது செய்த காவல்துறை!!

#image_title

மின்சார ரயிலில் அரங்கேறிய கொள்ளை சம்பவம் – பிடிபட்ட 2 பேரை கைது செய்த காவல்துறை!!

திருவள்ளூர், கும்முடிப்பூண்டி சுண்ணாம்புக்குளம் பகுதியினை சேர்ந்த மவுலீஸ்(24) என்பவர் தனது நண்பர்கள் 3 பேருடன் கடந்த மார்ச் 6ம் தேதி சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து கும்முடிப்பூண்டி செல்லும் மின்சார ரயிலில் பயணித்துள்ளார். இடையே கவுரப்பேட்டை ரயில் நிலையத்தில் 5 இளைஞர்கள் அந்த ரயிலில் ஏறியுள்ளனர். அந்த இளைஞர்கள் ரயிலில் இருந்த மவுலீஸ் உள்ளிட்ட சக பயணிகளிடம் இருந்து கத்திமுனையில் செல்போன்கள், பணம் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்துக்கொண்டு அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தி கும்முடிப்பூண்டி ரயில்நிலையம் செல்லும் பாதி வழியில் நிறுத்தி அங்கிருந்து தப்பி ஓடினர். இந்த கொள்ளை சம்பவத்தின் பொழுது 4 பேருக்கு காயம் ஏற்பட்ட நிலையில், இந்த கொள்ளை சம்பவம் குறித்து காவல்துறையில் வழக்கு தொடரப்பட்டது. பாதிக்கப்பட்ட பயணிகள் கொடுத்த புகாரில் 4 செல்போன்கள் மற்றும் ரூ.5500 ரூபாய் பணத்தினை கொள்ளையடித்து சென்றதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த புகாரின்பேரில் கொள்ளையர்களை உடனடியாக பிடிக்க நடவடிக்கை எடுக்கும்படி ரயில்வே ஏடிஜிபி வனிதா உத்தரவிட்டுள்ளார். அதன் பேரில், தனிப்படைகள் அமைக்கப்பட்டு சம்மந்தப்பட்ட இடத்தில் இருந்த சிசிடிவி பதிவுகள், காணாமல் போன்களின் செல்போன் சிக்கனல்கள் உள்ளிட்டவற்றை வைத்து தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.

தற்போது இதில் ஈடுபட்ட கும்முடிப்பூண்டியை சேர்ந்த லெவின்(26), திருபாலைவனத்தை சேர்ந்த விஜி(24) உள்ளிட்ட 2 பேரை போலீசார் கண்டறிந்துள்ளனர். அவர்களை கைது செய்துள்ள காவல்துறை, இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மேலும் 3 பேரான வெங்கடேஷ், கணேஷ், பிரவீன் உள்ளிட்ட 3 பேரை தீவிரமாக தேடி வருகிறார்கள். சென்னையில் ஓடும் ரயிலில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பீதியினை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version