Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கொரோனாவுக்கு எதிராக தமிழ்பிரபல நடிகர் கையில் எடுத்த புது முயற்சி?

தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மன அழுத்தத்தை போக்க புது முயற்சி ஒன்றை கையில் எடுத்துள்ளார்.

தஞ்சை மாவட்டம்,  பட்டுக்கோட்டை சுற்றுவட்டாரப்பகுதிகளில்  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், அங்குள்ள கொரோனா வார்டுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா வார்டுகளில் உள்ள நோயாளிகளின் அழுத்தத்தை போக்க முடிவு செய்த நடிகர் ரோபோ சங்கர் மற்றும் திண்டுக்கல் செந்தில் ஆகியோர் தங்களது சொந்த செலவில் பட்டுக்கோட்டைக்கு சென்று, ஆட்சியர் அனுமதியுடன் நோயாளிகள் முன்பு பல குரலில் பேசி மன அழுத்தமின்றி கலகலப்பாக சிரிக்க வைத்து வருகிறார்.

இதனால் அந்த வார்டே கூத்தும் கும்மாளமுமாக தான் இருக்கும். அங்குள்ள செவிலியர்கள் முதல் மருத்துவர்கள், நோயாளிகள் வரை அனைவரும் ஜாலியா இருக்கிறதா தெரிகிறது.

இதற்கு காரணம் நடிகர் ரோபோ சங்கர் மற்றும் திண்டுக்கல் செந்தில் ஆகியோர் மற்ற எல்லோரை போன்றும் இல்லாமல் லாக் டவுன் காலத்தில் சுயநலமாக வீட்டிலேயே முடங்கிக் கிடக்காமல் களத்தில் இறங்கி  சவாலாக இந்தப் பணியை எடுத்து செய்கின்றனர்,

ஏழை மக்களுக்கு உதவி செய்யும் குணம் படைத்த பாலிவுட் நடிகர் சோனு சூட் டைப் போல நமது தமிழ் நாட்டிலும் நடிகர் ரோபோ சங்கர் மற்றும் திண்டுக்கல் செந்தில் போன்றவர்கள் இருக்கத்தான் செய்கின்றனர்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ரோபோ சங்கர், கொரோனா தொற்றாளர்களை தனிமைப்படுத்த வேண்டுமே தவிர ஒதுக்கி வைக்கக்கூடாது எனக்கூறினார். இவர்களது செயலுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிகிறது.

 

Exit mobile version