Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கல் உப்பு பரிகாரம்..!! பணமும் நகையும் சேரும்..!! கடன் தீரும்..!

பரிகாரம் என்றாலே வெள்ளிக்கிழமைகளில் செய்வது சிறப்பை தரும். அதிலும் குறிப்பாக கல் உப்பு பரிகாரத்தினை வெள்ளிக்கிழமைகளில் செய்வது மகாலட்சுமி மற்றும் சுக்கிர பகவானின் அருளை நமக்கு பெற்றுத் தரும். வீட்டின் வறுமை நீங்கி பணவரவு ஏற்படவும், கடன் தொல்லைகளில் இருந்து விடுபடவும் கல் உப்பு பரிகாரத்தினை வெள்ளிக்கிழமை அன்று செய்வதன் மூலம் நல்ல பலனை நாம் கண்கூடாக பார்க்க முடியும்.

எவ்வளவுதான் ஓடி ஓடி உழைத்து சம்பாதித்தாலும் வரவிருக்கும் செலவிற்குமே சரியாகி விடுகிறது. கையில் எந்த பணமும் இருப்பதில்லை என எண்ணுபவர்களும், அடகு வைத்த நகையை எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் மீட்கவே முடியவில்லை என எண்ணுபவர்களும் இந்த பரிகாரத்தினை செய்யலாம்.

அதேபோன்று குடும்ப முன்னேற்றம் எப்பொழுதும் ஒரே நிலையில் தான் இருக்கிறது, அடுத்த நிலைக்கு உயரவே முடியவில்லை தொழிலிலும் எந்த முன்னேற்றத்தையும் காண முடியவில்லை என எண்ணுபவர்களும் இந்த பரிகாரத்தினை செய்யலாம்.
இந்த பரிகாரத்தினை தனி நபருக்கு என செய்யாமல் பொதுவான வேண்டுதல்களுக்காக செய்ய வேண்டும்.

இந்த பரிகாரத்தினை வெள்ளிக்கிழமை நாட்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் எந்த நேரம் வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். ஆனால் வெள்ளிக்கிழமை நாட்களில் சுக்கிர ஹோரையில் மட்டும்தான் கண்டிப்பாக இந்த பரிகார்த்தனை செய்ய வேண்டும்.
இந்த பரிகாரத்தினை செய்வதற்கு ஒரு கண்ணாடி பவுல் அல்லது மண்ணால் செய்யப்பட்ட கின்னத்தினை எடுத்துக்கொள்ள வேண்டும். பூஜை அறையில் விளக்கேற்றி வைத்துவிட்டு அதுக்கு முன்பாக அமர்ந்து நமது வலது கையில் கல் உப்பினை வைத்துக்கொண்டு நமது கடன் பிரச்சனைகளை மகாலட்சுமி தேவியையும் நமது குலதெய்வத்தையும் நினைத்து மனதார வேண்டிக் கொள்ள வேண்டும்.

அதன் பிறகு அந்த கல் உப்பினை அந்த கண்ணாடி பவுலின் உள்ளே கொட்டி விட வேண்டும். பிறகு ஒரு ரூபாய் நாணயத்தினை மஞ்சள் கலந்த நீரில் கழுவி விட்டு நன்றாக துடைத்த பின்னர் அந்த கல் உப்பில் வைத்து விட வேண்டும். இந்த ஒரு ரூபாய் நாணயத்தை கல் உப்பில் வைப்பதற்கு முன்பாக அதன் மேல் சிவப்பு அல்லது பச்சை நிற பேனாவினால் ஃபெக்கூ சிம்பல் ஐ வரைந்து கொள்ள வேண்டும். இந்த சிம்பல் பணத்தை இருக்கக்கூடிய சக்தி வாய்ந்த ஒன்றாகும்.

இவ்வாறு செய்த பின்னர் நமக்கு பணவரவு வேண்டுமென்றால் பண வரவிற்காகவும், கடன் தீர வேண்டும் என்றால் கடன் தீர வேண்டும் எனவும், நகையை மீட்க வேண்டும் என்றால் நகை மீட்க வேண்டும் எனவும் மகாலட்சுமி தாயார் இடம் மனதார வேண்டிக் கொள்ள வேண்டும். அதன் பிறகு அந்த கல் உப்பினை நமது வீட்டின் குபேர மூலையில் வைக்க வேண்டும்.

நமது வீட்டின் குபேர மூலையில் அனைவருமே பீரோவினை தான் வைத்திருக்கும் எனவே பீரோவின் மேல் அல்லதும் கீழே இந்த கல் உப்பினை வைத்துக்கொள்ளலாம். அடுத்த நாள் காலை கல் உப்பில் உள்ள ஒரு ரூபாய் நாணயத்தினை எடுத்து நாம் பணம் எந்த இடத்தில் வைக்கிறோமோ அந்த இடத்தில் வைத்துக் கொள்ளலாம்.

அதன் பிறகு அந்த கல்லுப்பினை தண்ணீரில் கரைத்து விட்டு கால் படாத இடத்தில் ஊற்றி விட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் நம்மிடம் உள்ள கஷ்டங்கள் மற்றும் திருஷ்டிகள் அனைத்தும் நீங்கி கரைந்து போவதாக அர்த்தம்.

Exit mobile version